கிருஷ்ணன் கோயிலில் புதிய தமிழகம் சாலைமறியல்
மதுரை:
புதிய தமிழகம் கட்சித் தொண்டர் ஒருவரை நசுக்கிக் கொன்ற வாகனத்தின் டிரைவரைக் கைது செய்யக் கோரி,மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ளது கிருஷ்ணன் கோயில். இதன் அருகே உள்ள லக்ஷ்மியாபுரம் என்றகிராமத்தைச் சேர்ந்தவர் தேனுசாமி.
இவர் கடந்த திங்கள்கிழமையன்று லக்ஷ்மியாபுரத்திலிருந்து, சைக்கிளில் கிருஷ்ணன் கோயில் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் வந்துகொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரைஇடித்துவிட்டுச் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தேனுசாமி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பிணமானார். இவர்புதியதமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்.
தேனுசாமியை இடித்துக் கொன்றுவிட்டு தப்பிவிட்ட வாகனஓட்டியைக் கண்டுபிடித்துக் கைது செய்யும்படி புதியதமிழகம் கட்சியினர் செவ்வாய்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து மிகுந்தமதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதியதமிழகம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ராமராஜ் தலைமையில் இந்தச் சாலைமறியல் நடந்தது.தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தியபின் கூட்டம் கலைந்து சென்றது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications