நீதி விசாரணை கோரிக்கை
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தீயில் கருகி 27 மன நோயாளிகள் இறந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணைநடத்த வேண்டும் என்று தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஐதர் அலி, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
ஏர்வாடியில் நடந்துள்ள இந்த பரிதாபச் சாவுகள் மூலம், இதுவரை அந்தப் பகுதியில் மன நோயாளிகள்கொடூரமாக நடத்தப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, சாப்பாடு இல்லாமல்,மிகவும் கொடுரமான முறையில் நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்பு ஒருறை இந்தக் காப்பகங்கள் குறித்து அரசுக்குப் புகார் வந்தபோது, ஏராளமான நோயாளிகள் மதுரைராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போதே சுதாரித்து இந்தக் காப்பகங்களைத் தடைசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் இந்த அவல நிலை ஏற்பட்டு விட்டது.
ஏர்வாடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்குக் கடுமையான சட்ட தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இது சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications