Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை கலக்கும் ஈவ்-டீசிங்

Subscribe to Oneindia Tamil

சமீப காலத்தில் தமிழகத்தில் இளைஞர்-இளைஞிகளிடையே ஒருவரையொருவர் கிண்டல் செய்யும் சம்பவங்கள்அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக சென்னையில் தற்போது ஈவ் டீசிங் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

மாணவி சரிகா ஷாவை பழிவாங்கிய பின்னர் கொஞ்சம் அடங்கியிருந்த இந்த ஈவ்-டீசிங் மீண்டும் தலையெடுக்கஆரம்பித்துள்ளது.

வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருந்து,நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் முகாமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். படிப்படியாகமுன்னேறி, வெற்றி பெற்ற பலரின் பெயர்களையும் வரலாறு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், சில இளைஞர்கள் ஏன் இப்படி ஈவ் டீசிங்கில் ஈடுபட்டு தனது பெயரையும் தங்களின் குடும்பத்தின்பெயரையும் கெடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

சாலையில் போகிற, வருகிற பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பது, பிளையிங் கிஸ் அடிப்பது என்று படிப்படியாக"முன்னேறும்" இளைஞர்கள், இப்போதெல்லாம் பெண்களின் கைகளைப் பிடித்து இழுப்பது, நடு ரோட்டிலேயேபெண்களைக் கட்டிப் பிடிப்பது, இன்னும் சில வேளைகளில் முத்தம் கூடக் கொடுப்பது என்று மேலும் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவை தவிர, பெண்களுக்குத் தெரியாமலேயே அவர்களைப் புகைப்படம் பிடித்து, பிறகு அந்தப் புகைப்படங்களைஅந்தப் பெண்களிடமே காட்டி, தகராறு செய்ததற்காக, கடந்த மாத இறுதியில் 5 இளைஞர்கள்சென்னை-தண்டையார்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைபேசியில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, ஈவ் டீசிங் செய்யும் இளைஞர்களும் இந்தச் சிங்காரச்சென்னையில் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு வாலிபர் சென்னை அடையாறில் பிடிபட்டுள்ளார்.

அதே போல, பழைய பல்லாவரத்திலும் ஒரு ஈவ் டீசிங் நடந்துள்ளது. தன்னுடைய மகளை சில இளைஞர்கள் கேலிசெய்ததைப் பொறுக்க முடியாத தாய், அவர்களைத் தட்டிக் கேட்டிருக்கிறார். ஆனால், அந்த இளைஞர்கள் பதிலுக்குதாய்-மகள் மேல் கற்களை வீசியுள்ளனர். இதனால் நெற்றியில் காயம்பட்டு, மகள் மருத்துவமனையில் இருக்க,அந்த இளைஞர்கள் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னையில் இப்படி அடிக்கடி நடக்கும் இந்த ஈவ் டீசிங் கொடுமையைப் பார்த்துக் கொண்டு போலீசும் சும்மாஇருக்கவில்லை. முக்கியமான பெண்கள் பள்ளிகளின் முன்பும், பெண்கள் கல்லூரி முன்பும் சாதாரண உடையில்போலீசார் நடமாடுகிறார்கள்.

யாரேனும் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ, கேலி செய்தாலோ, உடனே இந்தப் போலீசார் அவர்களைபோலீஸ் வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டுபோகிறார்கள். அந்த வகையிலும், கடந்த மாதம் 17 இளைஞர்கள்ஒட்டு மொத்தமாகப் போலீசில் மாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் கன்னியாகுமரியில் நடந்த ஈவ் டீசிங்கோ கொடுமையிலும் கொடுமை. தன்னைக் காதலிக்கமறுக்கிறார்கள் என்பதால் ஆத்திரப்பட்ட ஒரு இளைஞர், அக்கா-தங்கை முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு,ஊரைவிட்டே தப்பியோடி விட்டார். இந்தச் சகோதரிகளின் பெற்றோர் இவர்களின் முகத்தைப் பார்த்துவிட்டுஎவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்கள்?

தங்களை ஈவ் டீசிங் செய்த வாலிபர்களை பெண்களே நையப் புடைத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 3 பெண்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஹா, பெண்களும்கிரிக்கெட் விளையாடுகிறார்களே என்று அதைப் பார்த்து ரசிக்காமல், 3 இளைஞர்கள் அந்தப் பெண்களைக்கிண்டல் செய்துள்ளனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண்கள், தங்களுடைய "ஸ்போர்ட்ஸ்" உடம்பை முறுக்கிக் கொண்டு அந்தஇளைஞர்களை விரட்டினர். கையில் கிரிக்கெட் மட்டை வேறு வைத்திருந்தார்கள் அந்த 3 பெண்களும். அந்தமட்டையாலேயே 3 இளைஞர்களையும் நையப்புடைத்து விட்டனர்.

பலத்த காயமடைந்த அந்த 3 இளைஞர்களில் ஒருவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காலி. மற்ற 2பேரும் உடம்பில் கட்டுக்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+