திருமாவளவன்-கிருஷ்ணசாமிக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி ஆகியோர் தொடர்ந்து அவதூறாக பேசினால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பா.ம.கவை விமர்சித்து திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் அறிக்கைகள்-பேட்டிகள்கொடுத்து வருகின்றனர். இதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கை:
பச்சைப் படுகொலை செய்வதே உனது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்; ஒவ்வொரு இளைஞர் மீதும் 10கொலை வழக்குகளாவது இருக்க வேண்டும் என்று தனது தொண்டர்களுக்கு உபதேசம் செய்துள்ள தலைவர்என்னைப் பற்றி விமர்சனம் செய்வது கேலிக்குரியதாக உள்ளது.
இந்தத் தலைவர் மீது 1997-ம் ஆண்டிலிருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட போலீஸ் வழக்குகள் உள்ளன. இந்தத்தலைவரின் தூண்டுதலால்தான் பாண்டிச்சேரி அபிசேகபாக்கத்தில் என்னைக் கொல்ல அவர்களது கட்சிக் கும்பல்முயன்றது.
இந்தத் தலைவர் மீது அரசியல் காரணமாக எந்த வழக்கும் இல்லை. வன்முறையைத் தூண்டி விடும் பேச்சுக்காகவேஇவர் மீது இத்தனை வழக்குகள் உள்ளன.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்க எத்தனையோ கட்சிகள், அமைப்புகள் உள்ளன. ஆனால் அந்தஅமைப்புகளின் தலைவர்கள் யாரும் வன்முறையை போதிக்கவில்லை. பிற மக்களிடையே நல்லிணக்கத்தைப்பேணும் வகையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தின் வடக்கில் ஒருவரும், தெற்கில் ஒருவரும் தங்களை தலித் மக்களின் ஏகபோக பிரதிநிதி என்றுகூறிக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை அரசியல் தலைவர்களாகவோ அல்லது சமுதாயஇயக்கமாகவோ நான் எப்போதுமே நினைத்தது இல்லை. வெறும் வன்முறைக் கும்பல்களாகவே பார்க்கிறேன்.
குடிசையை யார் கொளுத்தினாலும் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுபவன் நான். என்னைப்பார்த்து இவர்கள் குடிசையைக் கொளுத்துகிறேன் என்று பொய் சொல்லி வருகிறார்கள்.
இந்தக் கும்பல்களுக்கு இனிமேலும் நான் பதில் சொல்லப் போவதில்லை. தொடர்ந்து இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications