3ம் வகுப்புவரை கட்டாய தமிழ் கல்வி: புதிய உடன்பாடு
சென்னை:
தமிழகத்தில் 3ம் வகுப்புவரையில் கட்டாய தமிழ் கல்வி முறை அமல்படுத்தப்படலாம் என்று தமிழக அரசுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அரசின் உத்தரவை எதிர்த்து தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு கூடதொடரப்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி அளிப்பது பெற்றோர்உரிமை என்று இந்த பள்ளிகள் வாதிட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்கள் தாங்கள் எந்த மொழியில் படிக்க விரும்புகிறார்களோ அதையேதொடர்ந்து படிக்க வழிவகை செய்ய வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக அரசு நடக்கக்கூடாதுஎன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆங்கிலம் மற்றும்தமிழ்வழிக்கல்லி நிறுவனங்களின் கூட்டமைப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் நலனை கருதி கட்டாய தமிழ் மொழி கல்வித் திட்டத்தைவலியுறுத்தி தி.மு.க.அரசு தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்குவேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதை அடுத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரையைசந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பள்ளிநிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அமைச்சர் நிராகரித்தார்.
ஆனால் 5ம் வகுப்புவரை கட்டாய தமிழ் கல்வி என்பதற்கு பதிலாக குறைந்த பட்சம் 3ம் வகுப்புவரை கட்டாய தமிழ்கல்வியை அமல்படுத்தலாம் என்று அமைச்சர் யோசனை தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த புதிய திட்டத்தை சங்க நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டனர். இது தொடர்பாக அரசுக்கும், சங்கநிர்வாகிகளுக்கும் இடையே ஒப்பந்தம்மும் ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3ம் வகுப்புவரை கட்டாய தமிழ் கல்வியை கொண்டு வரும் திட்டம் குறித்த அறிவிப்பை விரைவில் அரசுவெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications