நடந்தது ஊழல் அல்ல!, நான் தான தவறு செய்துவிட்டேன்: டான்சி வழக்கில் அதிகாரி பல்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி நில பேர வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக முன்பு சாட்சி கூறிய அதிகாரி, இப்போது நிலம்வாங்கியதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்றும் நான் தான் தவறு செய்துவிட்டேன் என்றும் பல்டி அடித்துள்ளார்என்று தெரியவந்துள்ளது.

டான்சி என்ற தமிழக அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் இடத்தை ஜெயலலிதா கடந்த முறை முதல்வராகஇருந்தபோது வாங்கினார். அதற்காக ரூ 1.8 கோடி அரசுக்குக் கொடுத்தார்.

இதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.அதில், நிலத்தின் உண்மையான விலையைவிட ரூ.4 கோடி குறைவாக ஜெயலலிதா அரசுக்குக்கொடுத்துள்ளதாகவும், ஒரு அரசு ஊழியர் அரசுக்குச் சொந்தமான நிலத்தை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றும்கூறியிருந்தார்.

பிறகு, அடுத்து வந்த தேர்தலில் வென்ற திமுக ஜெயலலிதா மீது பல ஊழல் குற்றங்களைச் சுமத்தியது. மேலும்இதற்காகவே தனி நீதிமன்றத்தையும் அமைத்தது.

அதைத் தொடர்ந்து, இந்த டான்சி வழக்கும் இந்த தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.இதை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.

இந்த டான்சி நில பேர வழக்குதான் ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடைசெய்யக் காரணமானவழக்காகும்.

மேலும், முதல்வர் பதவியில் நீடிக்க இன்னும் 3 மாதங்களுக்குள் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்திலிருந்து விடுபட்டுஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய நிலையில் ஜெயலலிதா இருக்கிறார்.

இந்த வழக்கில் இன்று முக்கிய சாட்சிகளான அடையார் பகுதி சார் பதிவாளர் (துணை ரிஜிஸ்ட்ரார்) உட்பட 3பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.

பல்டி அடித்த சார்பதிவாளர்:

ஆனால், இப்போது அடையார் பகுதி சார்பதிவாளர் தனது சாட்சியத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகத்தெரியவந்துள்ளது. இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்கூறப்பட்டுள்ளதாவது:

அடையார் பகுதியின் சார்பதிவாளர் இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். இவர் சார்பில் இப்போது13 பக்க புதிய சாட்சியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதில், ஜெயலலிதா வாங்கிய அந்த நிலத்தின் சர்வே நம்பரையும், பிளாட் நம்பரையும் நான் சரியாக பார்க்காமல்தவறுசெய்துவிட்டேன். அந்த நிலத்தை விற்றதால் அரசுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. மேலும், இதில் ஊழல்எதுவும் நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா வாங்கியதாக காண்பிக்கப்பட்ட பிளாட் நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதாக நான் நினைத்துஅதற்கு அதிக விலையை நான் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், ஜெயலலிதா வாங்கிய நிலம் உண்மையில்நெடுஞ்சாலையை ஒட்டி இல்லை. அது நெடுஞ்சாலையில் இருந்து தூரத்தில் தான் உள்ளது. இதனால், அதன் மதிப்புஜெயலலிதா நான் முன்பு குறிப்பிட்டதைப் போல அதிகம் இல்லை.

அதன் விலை குறைவு தான். அந்த நிலத்துக்கு ஜெயலலிதா கொடுத்த விலையும் சரி தான். நான் தான் டெக்னிகல்தவறு செய்து விட்டேன். என்னுடைய தவறினால் தான் ஜெயலலிதா வீணாக பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்.

என்னுடைய மதிப்புப் பிழையால் நடந்த தவற்றின் காரணமாக, கடந்த திமுக அரசு ஒரு வழக்கை பதிவுசெய்துவிசாரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் முதல்வருக்கும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை நான் முதல்வரின் வற்யுறுத்தலாலோ அல்லது அச்சுறுத்தலாலோ சொல்லவில்லை.

இவ்வாறு அந்த அபிடவிடில் அடையாறு சார் பதிவாளர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் கோர்ட் இதை ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொள்ளாதா என்று இன்னும் தெரியவில்லை. அவ்வாறுஏற்றுக்கொண்டால் ஜெயலலிதா எந்த தடையும் இன்றி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+