பூமிக்கு மேல் 41 கிமீ உயரத்தில் உயிர்களா?

Subscribe to Oneindia Tamil

புனே:

பூமிக்கு மேல் 41 கிலோமீட்டர் உயரம் வரை உயிர்செல்கள் வாழமுடியும் என்று விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை பூமிப்பரப்பின் கிடைமட்டத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரைதான் உயிரினங்கள் வாழமுடியும் என்றுபெரும்பாலான விஞ்ஞானிகள் நம்பி வந்தனர்.

இருப்பினும் சில விஞ்ஞானிகள் மட்டும் பூமிக்கு மேலே சில கிலோமீட்டர் உயரம் வரை உயிரினங்கள் வாழசாதகமான சூழ்நிலைகள் உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வெவ்வேறு உயரங்களில் நுண்ணுயிர்களின் மாதிரிகளை வைத்து அந்த உயரங்களில்நுண்ணுயிர்களின் நடவடிக்கைகளை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையை மேற்கொண்டவர் பிரபல வானஇயற்பியல் பேராசிரியர் ஜயந்த் நராலிகர் என்பவர்.

இவர் உயரமாறுபாடுகளால், நுண்ணுயிர்கள் உயிருடன் இருக்கிறதா என்றும், அவற்றின் இயக்கங்களில் மாற்றம்ஏற்படுகிறதா என்றும் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொண்டார்.

பூமியின் கிடைமட்டப்பரப்பில் தான் உயிர்கள் வாழும் என்றால், பூமியிலிருந்து உயரம் அதிகரிக்க அதிகரிக்ககாற்றில் (அண்டவெளியில்) வாழும் உயினங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்ல வேண்டும். ஆனால்,உயரமாறுபாட்டிற்கு ஏற்ப அவ்வாறு உயிரினங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாறுதல் இல்லை என்றால்பூமிக்கு மேலும் உயிரினங்கள் வாழமுடியும் என்று அர்த்தம். மேற்கூறிய 2 அனுமானங்களை வைத்து அந்தஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) நிதியுதவி அளித்து ஏற்பாடு செய்த இந்த ஆராய்ச்சியில்,பேராசிரியர் நராலிகருடன் பல ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்துபணியாற்றுகிறார்கள்.

டி.ஐ.எப்.ஆர் லிருந்து பேராசிரியர் ராமதுரை, சி.சி.எம்.பி யிலிருந்து டாக்டர் சிவராஜ் மற்றும் ரெட்டி,அன்வெஷ்னா விலிருந்து புஷ்பா பார்கவா, ஐ.எஸ்.ஆர்.ஓ விலிருந்து ராஜரத்னம், வேல்ஸ்பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் டேவிட் லாய்ட் மற்றும் சந்ரா விக்ரமசிங்கே ஆகியோர் இந்தஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் நராலிகர் கூறியதாவது,

இதற்காக ஒரு ராட்சத பலூனில் ஆராய்ச்சிக்கு வேண்டிய நுண்ணுயிரியின் மாதிரிகள் மற்றும் சோதனைஉபகரணங்கள் ஆகியவற்றை வைத்து வின்னில் செலுத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள டி.ஐ.எப்.ஆர் மையத்திலிருந்து இந்த பலூன் கடந்த ஜனவரி 21 -ந் தேதி செலுத்தப்பட்டது.

இந்த சாதனத்தை வைத்து வெவ்வேறு உயரங்களில் நுண்ணுயிரிகளின் அடர்த்தியைக் காண்பதற்கு மாதிரியைஎடுக்க முடியும்.

அவ்வாறு எடுக்கப்பட்ட 2 மாதிரிகளில் ஒன்றை சி.சி.பி.எம் க்கும், மற்றொரு மாதிரியை வேல்ஸ்பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகள் 20 கி.மீ, 25 கி.மீ, 28 - 39 கி.மீ மற்றும் 39 - 41 கி.மீ ஆகிய 4 வெவ்வேறு உயரங்களில்எடுக்கப்பட்டவை.

ஆராய்ச்சியின் முதல்நிலை முடிவுகள் உயிரினங்களின் எண்ணிக்கையில் அவவளவு பெரிய மாறுதல் இல்லைஎன்றே தெரிவிக்கின்றன.

இந்த உயரங்களில் உயிரிகள் இருப்பதும், அதன் எண்ணிக்கையில் மாறுதல் இல்லாமல் இருப்பதும் பூமிக்குமேல்உயிரினம் வாழமுடியும் என்ற கொள்கைக்கு சாதகமாகவே உள்ளன.

மேலும், அந்த உயிர்கள் எல்லாம் பாக்டீரியா இணத்தைச் சேர்ந்தவையா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

மேலும், அந்த உயிரிகளின் மரபணு சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை முடிப்பதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும். 1918 -ம் ஆண்டில் ஒருவித வைரஸ் நோய் பரவியது.

அந்நோய், மும்பையிலும் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலும் ஒரு சில நாட்கள் இடைவெளியில் ஏற்பட்டது. இந்தநோய் மனிதர்கள் மூலமாகப் பரவுவதாக இருந்தால், உலகின் பல பாகங்களுக்கும் பரவ நீண்ட நாட்களாகும்.எனவே, மழை போல வைரஸ்கள் கொட்டியதால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று கருதினர்.

அப்போது விஞ்ஞானிகள் இந்த பூமிக்குமேல் உயிரிகள் வாழுகின்றன என்ற கொள்கையை நம்பினார்கள்.

இவ்வாறு பேராசிரியர் நராலிகர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+