மேம்பால ஊழல் வழக்கு: நீதிபதி அசோக்குமார் கருத்துக்களை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில், சென்னை நகர முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் தெரிவித்தகருத்துக்களை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
கருணாநிதி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தசாலை மேம்பாட்டு ஆலோசகர் சீனிவாசன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார், இந்த வழக்குதொடர்பாக புகார் கொடுத்த சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு மற்றும் புலன் விசாரணை அதிகாரிபத்மநாபன் ஆகியோரை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தார்.
இந்நிலையில் அசோக்குமார் தனது உத்தரவில் தெரிவித்திருந்த கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரிசி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன், இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்என்று அசோக்குமாருக்கும், ஜாமீனில் விடுதலை ஆகி இருக்கும் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கும் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.
வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த பின்பு உயர் நீதிமன்ற நீதிபதிமலைசுப்ரமணியம் தன் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது, புகார்தாரர் ஆச்சார்யலுவையும், புலன் விசாரணை அதிகாரிபத்மநாபனையும் முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் விசாரித்து, வாக்குமூலம் பதிவு செய்ததுதுரதிருஷ்டவசமானது.
செஷன்ஸ் நீதிபதியின் இந்த நடவடிக்கை தேவையற்றது என்று கருதுகிறேன். இது அரசு தரப்பினருக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.
புகார் தாரரையும், புலன் விசாரணை அதிகாரியையும் விசாரிக்கும் போது அவர்களிடம் சத்தியப் பிரமாணம்எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164வது பிரிவின் கீழ், இது போன்றவாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது.
இதன் மூலம், செஷன்ஸ் நீதிபதி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். இது தேவையற்ற செயல்.ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது, புகார்தாரரையும், புலன் விசாரணை அதிகாரியையும் விசாரித்துவாக்குமூலம் பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை.
ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது, அரசுத்தரப்பினர் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமீன்கொடுக்கக்கூடாது என்று ஆணித்தரமாக வாதாடத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கசெஷன்ஸ் நீதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது.
அதே சமயம், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் செஷன்ஸ் நீதிபதி சாட்சிகளை விசாரித்து வாக்குமூலம்பதிவு செய்தது சட்டவிரோதமானது. இதை ஏற்க முடியாது. ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இது போன்றுசாட்சிகளை விசாரிப்பது தேவையற்றது என்பதால், இந்த வாக்குமூலங்கள் நீக்கப்படுகின்றன.
நீதிபதி சுயக்கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும். தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. ஜாமீன் மனுமீதான விசாரணையின் போது, செஷன்ஸ் நீதிபதி தனது பணியில் இருந்து தவறிவிட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமாரின் இந்த செயல்பாடுகள் அவரதுஅதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. எனவே, புகார்தாரர், புலன் விசாரணை அதிகாரி ஆகியோரின் வாக்குமூலங்களும்ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல், ஜாமீன் மனு மீதான உத்தரவில் நீதிபதி தெரிவித்த கருத்துக்களும் நீக்கம் செய்யப்பட வேண்டியவை.ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்படவர்களை கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்துஉச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முதன்மை செஷன்ஸ் நீதிபதி தவறாக புரிந்து கொண்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம்கூறவில்லை. எனவே, ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் மீதான ஜாமீன் மனு மீது முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிதெரிவித்த கருத்துக்கள் நீக்கப்படுகின்றன.
மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக,சென்னை மாநகராட்சியின் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள்அப்போதைய ஆளுனர் பாத்திமா பீவி மற்றும் முதல்வரிடம் கொடுத்த புகார் மனுக்கள்குப்பைத் தொட்டியில்வீசப்ப்டடுள்ளதா என்று அசோக்குமார் கேட்ட கருத்தும் நீக்கப்படுகிறது.
ஆனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள ஸ்டாலினிடம் விசாரணை செய்வதாக இருந்தால், போலீசார் 1 நாள்முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், அவர் தன்னுடன் 3 வக்கீல்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும்முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது கருத்து அல்ல என்பதால், இதை நீக்க முடியாது. புகார்தாரர் ஆச்சார்யலு, புலன்விசாரணை அதிகாரிபத்மநாபன் ஆகியோரின் வாக்குமூலங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிபதி மலை சுப்ரமணியன் தனதுதீர்ப்பில் கூறி உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications