நாயை அடித்தவரைக் கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
சென்னை:
பக்கத்து வீட்டுக்காரரின் நாயும் தனது நாயும் சண்டை போட்டுக் கொண்டபோது பக்கத்து வீட்டுக்காரரின் நாயைஅடித்தவர் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறையும், உடந்தையாகஇருந்த அவரது தாய்க்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆண்டியப்பன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இருவரது வீட்டிலும் நாய்கள் வளர்த்தார்கள்.சம்பவ தினத்தன்று இரு வீட்டு நாய்களும் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டன.
இதையடுத்து தனது நாய் கடிபட்டு விடப்போகிறதே என்ற கவலையில் ஆண்டியப்பன் வீட்டு நாயை கல்லால்அடித்து உதைத்துத் துரத்தி தனது நாயைக் காப்பாற்றியுள்ளார் ராமகிருஷ்ணன்.
இதில் ஆண்டியப்பன் வீட்டு நாய் படுகாயமுற்றது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்துஆண்டியப்பனும் அவரது தாயார் பூபதியம்மாளும் கோபமுற்றனர்.
வீட்டில் இருந்த உருட்டுக் கட்டைகளுடன் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த அவர்கள் அவரை சரமாரியாகஅடித்துள்ளனர். இதில் ராமகிருஷ்ணன் அங்கேயே இறந்தார்.
இதையடுத்து பூபதியம்மாளும், ஆண்டியப்பனும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது செங்கல்பட்டு செசன்ஸ்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையின் இறுதியில், ஆண்டியப்பனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், பூபதியம்மாளுக்கு ஒரு ஆண்டுசிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications