அரை நிர்வாணமாக்கப்பட்ட பெண்: வன அதிகாரிகள் மீது புகார்
சென்னை:
கல்வராயன் மலையில் விறகு பொறுக்கச் சென்ற பெண்ணின் சேலையைப் பறித்து, அவரை அரைநிர்வாணமாகஊருக்குள் அழைத்துச் சென்றதாக மனித உரிமைக் கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி அருகே உள்ளது கல்வராயன் மலை. இந்த மலையை ஒட்டிய கிராமங்களில்வசிக்கும் பெண்கள் சமையலுக்கு விறகு பொறுக்குவதற்கு இந்த மலைக்குச் செல்வதுண்டு. அவ்வாறு அக்கராயபாளையத்தைச் சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் விறகு பொறுக்க இந்த மலைக்குச் சென்றார்.
விறகு பொறுக்கும்போது மரங்களில் சிக்கி சேலை கிழிந்து விடும் என்பதால், அதை கழற்றி வைத்துவிட்டு விறகுபொறுக்கினார். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை அதிகாரிகள், பச்சை மரத்தை வெட்டியதாகக் கூறிராஜாத்தியை மிரட்டியிருக்கிறார்கள்.
பிறகு, அதே கோலத்தில் வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் ஊருக்குள் தெருத்தெருவாக அழைத்து வந்துள்ளனர்.அப்போது அதிகாரிகளிடம் ராஜாத்தி, "எனது சேலையைக் கொடுத்துவிடுங்கள், நான் ஊருக்குள் வருகிறேன்"என்று கெஞ்சியிருக்கிறார்.
ஆனால், அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டதால், தனது கைகளால் நெஞ்சை மறைத்தவாறு தெருவுக்குள்வந்திருக்கிறார் ராஜாத்தி.
பின்னர், இதுகுறித்து சென்னை மனித உரிமை கமிஷனில் ராஜாத்தி புகார் கொடுத்துள்ளார். அதை விசாரித்தநீதிபதி சம்பந்தம், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications