ராகிங்கை தடுக்கவில்லை என்றால்... அமைச்சர் எச்சரிக்கை
சென்னை:
ராகிங் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரிகள் மீதும், ராகிங்கைத் தடை செய்யாதகல்லூரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரைஎச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரிகளில் ராகிங் நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். ராகிங்கை கல்லூரிகள் தடுக்க தவறினால்அந்த கல்லூரியின் உரிமம் ரத்து செய்யப்படும். அந்த கல்லூரியின் முதல்வர் மீதும், கல்லூரி நிர்வாகத்தின் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகிங் நடந்தால் பாதிக்கப்பட்ட மாணவரோ, அவரது பெற்றோரோ போலீசிடம் புகார் கூறினால்,சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பல தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், கல்லூரி பஸ் செலவு, புதக்தகம், நூலகம், ஆய்வகம், உணவகம்ஆகியவற்றுக்கு என்று கூறி ரூ 30,000 வரை வசூல் செய்கிறார்கள். இது அரசு விதிகளுக்கு புறம்பானது.
இது குறித்து புகார்கள் வந்துள்ளன. 2 மாதங்களுக்கு முன்பே ஆல் இந்தியா கவுன்சில் ஆப் டெக்னிகல்எஜுகேஷனுக்கு (ஏ.ஐ.சி.டி.இ) இது குறித்து தெரியப்படுத்தினோம். ஆனால் அவர்கள் எந்த விதமானநடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக நடந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. ஏ.ஐ.சி.டி.இ. அனுமதிஅளித்த கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.
சுயநதிக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் மற்றும்மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் மாணவர்கள் கட்டும்வகையில், சுயநிதிக் கல்லூரிகளில் அனுமதி கிடைத்த மாணவ, மாணவியர் தங்களது கட்டணத்தை அரசிடம்கட்டினால் போதும்.
அந்தக் கட்டணத்தை வசூலித்து, சம்பந்தப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளிடம் அரசே கொடுத்து விடும் என்றார்தம்பிதுரை.
அதிகமாக பணம் வசூலித்து வரும் பல கல்லூரிகளின் பெயரையும் நிருபர்களுக்கு அமைச்சர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications