ஜெ.வுடன் சண்டை: வீட்டைவிட்டு வெளியேறி மீண்டும் வந்த சசிகலா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவிடம் கோபித்துக் கொண்டு தஞ்சாவூர் சென்றிருந்த சசிகலா, 15 நாட்களுக்குப் பின் மீண்டும்போயஸ் தோட்டத்திற்கு திரும்பி வந்தது தெரிய வந்துள்ளது.

முதல்வரின் நெருங்கிய தோழி சசிகலா. இவர்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இருந்தது கிடையாது.ஆனால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற பின், குறிப்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரன் கைது செய்யப்பட்ட பிறகு, 2 பேருக்கும் இடையே சிறிது புகைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சுதாகரன் கைது செய்யப்பட்டதால் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே சசிகலா பேசியதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க. எம்.பி. டி.டி.வி.தினகரனுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜெ. பேரவை செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும் சசிகலா குடும்பத்தினருக்குஜெயலலிதா மீது அதிருப்தியை அதிகப்படுத்தியது.

பின்னர் நடந்த சுதாகரன் கைது மற்றும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டெலிபோன்டேப் வழக்கு போன்ற சம்பவங்களும் போயஸ் தோட்டத்தில் உச்சகட்டப் போராட்டத்தைக் கிளப்பியுள்ளன.இதையடுத்து, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த எவரும் தன் அனுமதி இல்லாமல் போயஸ் தோட்டத்துக்குள்வரக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படிக் கோர்வையாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஜெ.-சசி பிரிவிற்கு அடித்தளம் அமைத்தது. இதன்விளைவாக, சென்ற மாத இறுதியில் சசிகலா போயஸ் தோட்டதில் இருந்து கோபித்துக் கொண்டு தஞ்சாவூர்சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த 15 நாட்களாக தஞ்சாவூரில் இருக்கும் இளவரசி வீட்டில் சசிகலா தங்கியிருந்ததை உளவுத்துறை போலீசார்உறுதிபடுத்த்தி உள்ளனர்.

இந்நிலையில், சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்குத் திரும்பியுள்ளார். தன் தோழி ஜெயலலிதாவுடன் சசிகலாசமரசம் செய்து கொண்டுவிட்டார் என்று போயஸ் தோட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனாலும், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. குடும்ப வேலைகாரணமாகத்தான் சசிகலா தஞ்சாவூர் சென்றிருந்தார் என்றும் சசிகலாவின் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள்தெரிவித்தனர்.

கருணாநிதி மீது நடராஜன் பாய்ச்சல்

நிலைமை இப்படி இருக்கும்போது, சசிகலாவின் கணவர் நடராஜன், "ஜெயலலிதாம்மா-சசிகலா பிரிவு என்பதுகருணாநிதி வேண்டுமென்றே கிளப்பி விட்ட வதந்தி. தன் நலம் விரும்பிகளை சந்தேகப்பட்டு, அவர்களைப் பிரிந்துஜெயலலிதா தனிமைப்படுத்தப் பட வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் திட்டம். ஆனால் இந்தத் திட்டம்பலிக்காது" என்று ஒரு பத்திரிகையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோபித்துக் கொண்டு போயஸ் கார்டனை விட்டுச் சென்ற சசிகலா மீண்டும் திரும்பி வந்திருப்பதுகுறிப்பிடத்தக்கது. நெருப்பில்லாமல் புகையுமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+