திருட்டுப் பட்டம் சூட்டி மாணவனைக் கொளுத்திய ஆசிரியர்
திருவாரூர்:
ஒரு ஆசிரியர் 10ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்குத் திருட்டுப் பட்டம் சூட்டி, அவனைத் தாக்கியதுடன், உயிரோடுஅவனை கொளுத்தியதாகவும் அந்த மாணவன் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
அங்கு உடல்கல்வி ஆசியராக வேலைசெய்பவர் பன்னீர்செல்வம். இவர் பள்ளிக்கூடத்தில் தான் வைத்திருந்த 450ரூபாயை, மன்மோகன்தான் திருடிவிட்டதாக எண்ணினார்.
இதனால் நைட்வாட்ச்மேன் மனோகரனைவிட்டு மன்மோகனை தனது அறைக்கு அழைத்து வரச்செய்தார். பிறகு 2பேரும் சேர்ந்து மாணவனைத் தாக்கிவிட்டு, அவன் மீது தீயும் பற்றவைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் உடம்பு முழுவதும் தீக்காயமடைந்த மாணவன் மன்மோகன் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
இதுபற்றி மன்மோகன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் சம்பவத்தன்று காலை பள்ளிக்குச் சென்றவுடன், மனோகரன் என்னை அழைத்துக் கொண்டு ஆசிரியர் பன்னீர்செல்வம் அறைக்குப் போனார். நான் அறைக்குள் வந்தவுடன் கதவைச் சாத்தினார்கள். பிறகு மனோகரன் என்தலையில் உருட்டுக் கட்டையால் அடித்தார். ஆசிரியர் பன்னீர்செல்வமும் என்தலை மீது இரும்புக் கம்பியால் மாறிமாறி அடித்தார்.
நான் கதறினேன். பிறகு அருகில் இருந்த ஸ்டவ்வை எடுத்து அதிலிருந்த மண்ணெண்ணையை என் தலை மீதுஊற்றினார்கள். பிறகு , "இதோடு தொலைஞ்சு போ" என்று என் மீது நெருப்பைப் பற்றவைத்தார்கள். நான்அலறிக்கொண்டு கதவைத் திறந்து வெளியில் ஓடிவந்தேன். அப்போது வெளியில் நின்ற மாணவர்கள் என்னைக்காப்பாற்றினார்கள் என்று மன்மோகன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
இதையடுத்து, ஆசிரியர் பன்னீர்செல்வம் மற்றும் வாட்ச்மேன் மன்மோகன் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைமுத்துப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
