வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் மன நோயாளிகள்
ஏர்வாடி:
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பாதஉறவினர்கள் அவர்களை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து சிறையில்அடைத்துவிடுமாறு போலீசாரை கேட்டுக் கொள்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல்வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை அவர்களது உறவினர்கள் வீட்டிற்குஅழைத்துச் செல்ல விரும்பவில்லை. மேலும் அவர்களை ஏதாவது ஒரு வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு போலீசாரிடம் கேட்டுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின்சிகிச்சைக்கு தங்களால் செலவு செய்ய முடியாது என்பதாலும், அவர்களை தங்களால்கவனித்துக் கொள்ள முடியாது என்பதாலும், அவர்கள் மீது ஏதாவது ஒரு வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள் என்றார்.
மனநல காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முழுமையாக மனநலம்பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்களில் பலருக்கும் நரம்புகள் சம்பந்தமான நோயால்பாதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதால் அவர்களை கட்டுப்படுத்தவும்முடிவதில்லை என்று கூறப்படுகிறது.
இவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல யாரும் தயாராக இல்லை.
தனியார் மனநல காப்பகங்கள் மூடப்பட்டு வருவது, மனநலம் பாதிக்கப்பட்டநோயாளிகளின் உறவினர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
மிகவும் மனநலம் பாதிக்கப்பட்டு, முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமேஅரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அரசு கூறி உள்ளது.
மற்ற நோயாளிகளை அவர்களது உறவினர்கள் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.
ஆனால், பெரும்பாலானவர்கள் இதற்கு தயாராக இல்லை.
இந்த மன நலம் இல்லாத வளர்ந்த குழந்தைகள் இனி தான் அதிக சிரமங்களைஅனுபவிக்கப் போகிறார்கள் என்பது தான் மனதை வலிக்கச் செய்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications