மாறன் மீதான வழக்கை வாபஸ் பெற்றதை எதிர்த்து வழக்கு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது விவகாரத்தின் போது,மத்திய அமைச்சர்கள்முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை விசாரிக்கஉத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, போலீசாரை தங்கள்கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன்மற்றும் டி.ஆர். பாலு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் மத்திய அரசின் உத்தரவின்படி இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்படாது என முதலில் மாநில அரசு அறிவித்தது.பின்னர் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் வழக்கறிஞர் துவாரகநாதன் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில், மத்திய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை கைவிடும்படி உத்தரவிட மாநிலஅரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால் அதைவிசாரித்து அதன் பேரில் வழக்கு தொடர வேண்டியது போலீசாரின் கடமை.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 321ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்பு தான் வழக்கை கைவிட முடியும்.
எனவே, நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்புதான் வழக்கை கைவிட முடியும்.ஆனால், சட்டப்பிரிவு 321ல் கூறப்பட்ட நிபந்தனைகைள் எதுவும் பூர்த்திசெய்யப்படவில்லை.
மத்திய அமைச்சர்கள் மாறன், டி.ஆர் பாலு ஆகியோரை விடுதலை செய்து மாநில அரசுபிறப்பிக்கும் உத்தரவு செல்லாது. அதை போலீசார் புறக்கணித்திருக்க வேண்டும்.மத்திய அமைச்சர்கள் மீதான வழக்ககுகள் கைவிடப்பட்டது பொதுநலனுக்காக அல்ல.
எனவே, மாறன், டி.ஆர். பாலு ஆகியோரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட்பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்கும்படி டி.ஜி.பி. போலீஸ் கமிஷனர்மற்றும் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications