நாமக்கல்லில் அச்சாகிய கள்ளநோட்டுகள் - 4 பேர் கைது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள நோட்டு அடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் முருகேசன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை இவரது ஓட்டலுக்கு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஏரக்குடி என்ற கிராமத்தைச்சேர்ந்த மாரிமுத்து என்பவர் இவரது ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டார்.
பிறகு, சாப்பிட்டு முடிந்ததும் அதற்கான பில்லைச் செலுத்த வந்தார் மாரிமுத்து. அதற்காக தனது பையில் இருந்துபுதிய 50 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டைப் பார்த்த ஓட்டல் முதலாளிக்கு சந்தேகம்வந்தது. ஏனென்றால், இது மற்ற 50 ரூபாய் நோட்டுகளை விட சற்று வித்தியாசமாக இருந்தது. இதுகுறித்து, உடனேமோகனூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து மாரிமுத்துவைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்குஅவரிடம் விசாரணை நடத்தியதில், அவரிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும், இது போல50 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் ரூபாய்நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து இவ்வாறு செய்துள்ளனர் என்பதும் தெரியவந்ததது.
மாரிமுத்து தவிர அவருடன் இணைந்து இந்த காரியத்தில் ஈடுபட்ட மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விவரம் வருமாறு,
மோகனூர் செவிட்டுரங்கன் பட்டியைச் சேர்ந்த ராஜா, ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ளகீரப்பூரைச் சேர்ந்த சாமிநாதன், சிவகிரி அருகே உள்ள அய்யம்பாளையம் சுப்பிரமணி ஆகிய 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்த, ஏராளமான 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications