மேம்பால ஊழல்: வந்தது விசாரணை கமிஷன்- சிக்கலில் ஸ்டாலின்
சென்னை:
சென்னை பெரம்பூரில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்துவிசாரிக்க 3 நபர் சிறப்பு விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளத.
இந் நிலையில், சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் பல நிதிமுறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாக த.மா.கா. உள்ளிட்ட எதிர்க் கட்சியினர்சென்னை மாநகராட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.
சென்ற மாதம் 30ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த புகார்கள்குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பெரம்பூர் மேம்பால ஊழல் குறித்து விசாரிக்கசிறப்பு விசாரணை கமிஷன் அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து சென்னையில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பெரம்பூரில் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளதாக எழுப்பப்பட்டுள்ளபுகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இந்த விசாரணைக் கமிஷனின்தலைவராக இருப்பார். தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் ஓய்வு பெற்ற நிர்வாகஇயக்குனர் ஜி.ரத்தினவேலு மற்றும் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு தலைமைப்பொறியாளர் ஷியமளா தம்புராட்டி ஆகிய 2 பேரும் உறுப்பினராக இருப்பார்கள்என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது சென்னையில் 11 மேம்பால்கள் கட்டப்பட்டன.பெரம்பூர் பாலம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மேயர் ஸ்டாலின் தான் இந்தபாலங்கள் கட்டுமானப் பணியை கண்காணித்து வந்தார்.
கட்டப்பட்ட 11 பாலங்களில் 10ல் ரூ. 12 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார்எழுந்துள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின், கருணாநிதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் கட்டப்பட்டு வரும் பெரம்பூர் பால ஊழல் விவகாரம் குறித்து விசாரிக்கஇப்போது சிறப்பாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளார் ஜெயலலிதா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications