ஹெராயினுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை - சுதாகரன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரன் தான் ஹெராயின் வாங்கவோ, பயன்படுத்தவோஇல்லை என்று கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுதாகரன். இதையடுத்து அவரதுகல்யாணம் பிரும்மாண்டமாக நடத்தப்பட்டது. சில மாதங்கள் கழித்து அந்த நபருக்கும் எனக்கும் எந்தசம்பந்தமுமில்லை என்று ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில், சுதாகரன் சின்ன எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் என்று ஒரு மன்றத்தை நடத்தி வந்தார். அதில் அவருக்குஉதவியாளராக இருந்த கோபு ஸ்ரீதர் என்பவரை தாக்கியதாகவும், 16 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள்வைத்திருந்தததாகவும் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 72 கிராம் போதைப்பொருள்தோட்டம் பாஸ்கரன் என்பவரிடமிருந்து வாங்கியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இப்போது, போதைப் பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் யாரிடமும் ஹெராஹயன் வாங்கவும் இல்லை, வைத்திருக்கவும் இல்லை. மேலும் நான் இதுவரைஹெராயினைப் பயன்படுத்தியதே இல்லை.
அவ்வாறு, நான் அதைப்பயன்படுத்தி இருந்தால் அது என் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும். எனவே என் மீதுகுற்றம் சாட்டிய போலீஸ் வழக்கு தொடர்ந்த உடனே என் ரத்தத்தை பரிசோதனை செய்திருக்கலாம்.
என் மீது பொய் வழக்கு போட்டு என்னை பழிவாங்கும் நோக்குடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் குற்றமற்வன். மேலும் எனக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உள்ளது. நான் முருக பக்தன் , கடவுளுக்குப்பயப்படுபவன். இந்த மாதிரிப் போதைப் பொருள் பழக்கம் எனக்கு இருந்தது கிடையாது.
ஏற்கனவே 2 முறை இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே சென்றிருக்கிறேன். அப்போது கோர்ட் விதித்தநிபந்தனைகள் எதையும் மீறாமல் இருந்திருக்கிறேன். எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்குமாறுகேட்டுக்கொள்கிறேன்.
இநத் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் மீண்டும் திங்கள் கிழமை விசாரணை தொடரும் என்றுஅறிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications