சூட்கேசில் பெண் பிணம்: சென்னையில் பரபரப்பு
சென்னை:
சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் இளம் பெண்ணின் பிணம் இருந்தது. இதுசென்னையில் பரபரப்பை ஏற்படுதித்தி உள்ளது.
இந்த சூட்கேஸ் நீண்ட நேரமாக கேட்பாரற்று அனாதையாகக் கிடந்தது. இதனால் பயணிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டது. இநத் சூட்கேசில் வெடிகுண்டு இருக்கக்கூடும் என்ற பயமும் பயணிகளுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, பஸ் நிலைய ஊழியர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் "29வதுபிளாட்பாரத்தில் இருக்கும் சூட்கேஸ் உரிமையாளர்கள், அதை வந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று ஒலிபெருக்கிமூலம் அறிவிப்பு செய்தனர் அதன் பின்பும் யாரும் சூட்கேசை எடுக்கவரவில்லை.
இந்த சூட்கேஸ் 4 அடி உயரும், 3 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இவ்வளவு பெரிய பெட்டியை யாரும்தவறுதலாக விட்டுச் செல்ல வாய்ப்பில்லை என்பதால் இந்த சூட்கேசில் வெடிகுண்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகம்வலுத்தது.
சுதந்திரதின விழா, தீவிரவாதிகள் மிரட்டல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்த சூட்கேசில்வெடிகுண்டு இருக்கக்கூடும் என்று அஞ்சிய பஸ் நிலைய ஊழியர்கள், எஸ்பிளனேடு போலீசாருக்கு இந்த மர்மசூட்கேஸ் குறித்த தகவலைத் தெரிவித்தனர்.
உடனே, அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் சூட்கேசை மிகுந்த எச்சரிக்கையுடன்நெருங்கிப் பார்த்தபோது, அதிலிருந்து நீண்ட முடி வெளிவந்தது. இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் உடனடியாக ஆட்டோ மூலம் இந்த சூட்கேசை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்குசூட்கேசை திறந்த போது , அதில் ஒரு இளம் பெண்ணின் பிணம் சுருண்டு கிடந்தது.
அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும், 5 அடி 5 அங்குல உயரம் கொண்ட அந்த பெண் கோதுமை நிறத்தில்காணப்பட்டார்.
மூக்கில் பச்சை நிற மூக்குத்தி காணப்பட்டது. வெள்ளை பூ போட்ட சுடிதாரும், மஞ்சள் நிற துப்பட்டாவும்அணிந்திருந்தார். அவர் சென்னையைச் சேர்ந்தவரா, வெளியூரைச் சேர்ந்தவரா அல்லது வெளி மாநிலத்தைச்சேர்ந்தவரா என்பது தெரியவில்லை.
இந்த பெண்ணின் முகம் வீங்கி காணப்படுவதால், இவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ்நிலையத்தில் உள்ள ஒரு போர்ட்டர் கூறுகையில், 50 வயது மதிக்கத்தக்க பெண் அதிகாலை இடுப்பில் ஒருகுழந்தையுடன் பஸ் நிலையத்திற்கு வந்தார் இன்னொரு கையில் பெரிய சூட்கேசை இழுத்த வந்தார்.
நாங்கள் தூக்கி வருகிறோம் என்று கேட்ட போது சூட்கேசை தர மறுத்து விட்டார். 2 பேர் வர இருக்கின்றனர்.நாங்கள் வேளாங்கண்ணி போகிறோம் என்று கூறி விட்டு ஆட்டோவில் வந்த 2 பேருடன் ஏறிச் சென்று விட்டார்என்று கூறினார்.
எனவே அந்த பெண்தான் ஆட்டோவில் வந்தவர்களுடன் பிணத்துடன் சூட்கேசை கொண்டு வந்து இங்குபோட்டுவிட்டு போயிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் போர்டர் கூறுகையில், சூட்கேசுடன் வந்த பெண்மணி மார்வாடிகள் போல் சேலை உடுத்தியிருந்தார்என்றார். கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த சுடிதாரூம் தமிழ் நாட்டு பெண்கள் அணிவது போல் இல்லை.மார்வாடிகள் அணிவது போல்தான் இருந்தது.
இதனால் பஸ் நிலையத்திற்கு வந்த பெண்மணிதான் இந்த சூட்கேசை கொண்டு வந்திருக்க வேண்டும். அவருக்குஇந்த கொலையில் சம்பந்தமிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸ் மோப்ப நாய் பிணத்தை மோப்பம் பிடித்த பின் பர்மாபஜார் வரை ஓடி விட்டு நின்றுவிட்டது.கொலையாளிகள் இது வழியாக தப்பிச் சென்றிருக்க்ககூடும். அல்லது இங்கிருந்து சூட்கேசை வாங்கியிருக்கக்கூடும்என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
சென்னிையின் முக்கிய பகுதியில் சூட்கேசில் பிணம் கைப்பற்றப்பட்டிருப்பது சென்னை நகரில் பெரும்பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications