சென்னையில் இன்று தி.மு.க. பேரணி: பலத்த போலீஸ் காவல்
சென்னை:
தி.மு.க. சார்பில் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டபேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு..க. தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பேரணியில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானதொண்டர்கள் பங்கேற்கின்றனர். சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே இருந்து மாலை 3 மணிக்குஇந்த பேரணி புறப்படுகிறது.
பேரணி அண்ணாசாலை, சேமியர்ஸ் சாலை (தேவர்சிலை), டி.டி.கே.சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,காமராஜர் சாலை வழியாக சென்று சீரணி அரங்கத்தை அடையும். பேரணிக்கு சென்னை மாநதராட்சி மேயர்மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
பேரணியில் வாகனங்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. கண்டனப் பேரணி தொடங்கும் இடம்முதல் முடியும் வரை நடைப்பயணமாகவே இருக்கும் என்று தி.மு.க.சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழத்தின் அன்ைது மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் வரும் தி.மு.கதொண்டர்கள் கிண்டி ஸ்பிக் அருகில் இறங்கிக் கொண்டு தாங்கள் வந்த வாகனங்களை கவர்னர் மாளிகை சாலைவழியாக அடையாறு சென்று திரு.வி.க. பாலம் வழியாக கடற்கரை சென்று கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறும்இடம் மற்றும் அதனையொட்டியுள்ள இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கண்டன பேரணி கடற்கரை சீரணி அரங்கத்தை அடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.பொதுக்கூட்ட மேடையில் மாலை 5 மணிக்கு நாகூர் அனீபாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் தொடங்குகிறது. பொதுக்கூட்டத்துக்கு பேராசிரியர் அன்பழகன்தலைமை தாங்குகிறார். மாவட்டச் செயலாளர்கள் சைதை கிட்டு, எல். பலராமன், பரிதி இளம்வழுதி ஆகியோர்முன்னிலை வகிக்கிறார்கள்.
கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர் பாலு, சென்னை மாநகராட்சிமேயர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமிஸ க.சுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பேசுகின்றனர்.
கண்டன பேரணியை சிறப்பாக நடத்த தி.மு.கவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுநடந்த சம்பவங்கள் போது நடந்த சம்பவங்களை அப்படியே அச்சிட்டு அந்த சுவரொட்டிகளை சென்னை நகரம்முழுவதும் ஒட்டி உள்ளனர். பேரணி செல்லும் பாதைகளில் கட்சிக் கொடி, பேனர்கள், தோரணிகள்கட்டப்பட்டுள்ளன.
பலத்த போலீஸ் காவல்
பேரணியையொட்டி போலீசார் பலத்த காவல் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில்இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறுகையில், இந்த பேரணியை போலீசாருக்குஎதிரான பேரணி என்று அறிவித்துவிட்டு பேரணி நடத்தப்படுவதால் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் முதல் சாதாரண போலீசார்வரை அனைவரையும் பொறுமையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்னர்.
பேரணி செல்லும் பாதையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வெளிமாவட்டங்களில் இருந்து 4,000க்கும் அதிகமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 13கம்பெனி அதிவிரைவு படையினர் சென்னை நதரில் முகாமிட்டு ஊர்வலத்தை கண்காணிக்கும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
பேரணி செல்லும் வழி நெடுகிலும் பேரணியில் செல்பவர்களை கண்காணிக்க வீடியோ காமிராக்கள் பல்வேறுஇடங்களிலும் நிலையாக பொருத்தப்பட்டுள்ளன. ஊர்வலத்தில் செல்லும் யாராவது தவறு செய்தால், வீடியோகாமிராவில் பதிவாகும்.
இதை தவிர வீடியோ காமிராவை போலீசார் வேன்களிலும் எடுத்துச் செல்கிறார்கள். இவற்றின் மூலம் ஊர்வலபாதை முழுவதும் பதிவு செய்யப்படும்.வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications