தொடங்கியது பேரணி: அடக்க அடக்க தி.மு.க. வளரும் - கருணாநிதி
சென்னை:
எவ்வளவுக்கு எவ்வளவு தி.மு.கவை அடக்க நினைக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வளரும் என்று தி.மு.தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.கவின் கண்டன பேரணிக்கு அதிக அளவு போலீஸ் காவல்போடப்பட்டுள்ளது கேட்கப்பட்டபோது அவர் இந்த கருத்தை கூறினார்.
10 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் இந்த பேரணி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. பெருந்திரளான தொண்டர்கள்இதில் கலந்து கொண்டுள்ளனர்.
பேரணியில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்களும் செவ்வாய்க்கிழமை இரவுமுதலே சென்னையில் குவியத் தொடங்கினர்.
முன்னதாக, பேரணி குறித்த ஏற்பாடுகளை கவனித்து வரும் தி.மு.க. எம்.பி.குப்புசாமி கூறுகையில், பேரணியில்பங்கு கொள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். மேலும் தொண்டர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள் என்றார்.
எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் பேரணி அமைதியாக நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்திருந்தாலும்கூட போலீசார் எந்த விதமான ரிஸ்கும் எடுக்கத் தயாராக இல்லை. சென்னை நகரம் முழுவதும் போலீசார்குவிக்கப்பட்டு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்து கருணாநிதி கூறுகையில், "போலீஸ் காவலை அதிகப்படுத்திபேரணியில் வெற்றி பெற வைக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு தி.மு.கவை அடக்கநினைக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தி.மு.க. வளரும்" என்றார்.
தி.மு.க. தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள பேரணியும் தொடர்ந்து நடக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications