டான்சி வழக்கு: ஜெ. அப்பீல் மீது நாளை விசாரணை
சென்னை:
டான்சி நில வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்திருந்த மனு மீதானவழக்கு விசாரணை நாளை (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
ஆட்சி மாற்றம்:
அந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா மற்றும் அவரதுஅமைச்சரக சகாக்கள் மீது ஊழல் வழக்குள் பலவற்றை தி.மு.க தொடர்ந்தது. இவற்றை விசாரிக்க 3 தனி சிறப்புநீதிமன்றங்களையும் தி.மு.க. அமைத்தது.
டான்சி வழக்கும் இந்த தனி நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்தது. டான்சி நிலங்களை வாங்கியதில் முறைகேடுநடந்துள்தாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.3 கோடி இழப்பு எற்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தனி நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதனால் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இந்நிலையில் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தார்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி:
இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகி உள்ளார்.
ஜெயலலிதாவின் அப்பீல் மனு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த அப்பீல் மனுமீதான விசாரணை, கடந்த 3ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீசன் முன்னிலையில் விசாரணைக்குவரவிருந்தது. ஆனால் குறிப்பிட்டபடி அன்று அப்பீல் மனு விசாரணைக்கு வரவில்லை. நிர்வாக வசதிக்காக இந்தமனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் ஜெகதீசன் மீது நம்பிக்கையில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயினிடம்சில வக்கீல்கள் கூறியதாலும், இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டதாலும்தான் 3ம் தேதி அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று பிறகுதெரியவந்தது.
மீண்டும் சு. சுவாமி மனு:
இந்நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்செய்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் அவர் அப்பீல் மனு மீதான விசாரணைக்கு ஊறு விளைவிக்கும்வாய்ப்புள்ளது. அதனால், இந்த வழக்கை முதலில் தொடர்ந்த தன்னையும் ஒரு வாதியாக இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தன் மனுவில் சுப்ரமணியம் சுவாமி கூறியிருந்தார்.
சாட்சியின் பல்டி:
இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமையன்று, முன்னாள் சார்பதிவாளர் தங்கவேல், "டான்சி நிலம் வாங்கியதில்எந்த விதமான முறைகேடும் நடக்கவில்லை. நான்தான் தவறான விலைகளை குறிப்பட்டுவிட்டேன். டான்சி நிலவிவகாரத்தில் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை" என்று கூறியிருந்தார்.
தங்கவேலின் கருத்தினால் டான்சி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அப்பீல்மனு மீதான விசாரணை திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதமன்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
இது குறித்து ஜெயலலிதாவின் வக்கீல் ஜோதி, "தங்கவேலு கூறிய கருத்தும் அப்பீல் மனு விசாரணையின் போதுஎடுத்துக்கூறப்படும்" என்று கூறினார்.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிதீர்ப்பளித்து. தனக்கு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில்அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த அப்பீல் மனுவும் திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிபாலசுப்ரமணியம் முன் விசாரணைக்கு வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications