விசாரணைக் கமிஷன் அமைப்பு- ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக பேரணியில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பகதவச்சலம் தலைமையில்விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஊர்வலத்தில் வந்த திமுகவினர் கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் தான் வந்துள்ளனர். திட்டமிட்டு போலீசார்மீதும் பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பெரும் அளவிலான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50,000 நஷ்டஈடு வழங்கப்படும்.காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000மும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 5,000மும் வழங்கப்படும்.

கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது துரதிஷ்டவசமானது. இம் மாநிரி சூழ்நிலைகளில் எதிர்காலத்தில் நிருபர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்புத் திட்டம் வகுக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+