ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் சி. ரங்கராஜனை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர் கவர்னர்மாளிகையில் சந்தித்தார்.
அவரிடம் நேற்று திமுக பேரணியில் நடந்த வன்முறை குறித்து விளக்கினார். இந்த வன்முறையை திமுக தான்தூண்டியது என்று ஆளுநரிடம் கூறிய சங்கர், அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவரிடம் அளித்ததாகக்கூறப்படுகிறது.
ஒழுங்காக வந்து கொண்டிருந்த திமுகவினர் டி.ஜி.பி. அலுவலகம் அருகே வந்தவுடன் அங்கு பாதுகாப்புக்குநின்றிருந்த போலீசாரை கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு அவர்கள் மீது கற்களையும் வீசியதாக கவர்னரிடம்தலைமைச் செயலாளர் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து தான் திமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications