ஆளுனரை சந்தித்தார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுனர் பொறுப்பு வகிக்கும் சி. ரங்கராஜனை திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை காலை நேரில்சந்தித்துப் பேசினார்.
காலை 10 மணிக்கு அவரை கருணாநிதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்துப் பேசினார். அவரிடம் போலீசார்நடத்திய வன்முறைத் தாக்குதல் குறித்து மனு கொடுத்த கருணாநிதி இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றநீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கருணாநிதியுடன் தனது கவலையைப் பகிர்ந்து கொண்ட ஆளுநர் ரங்கராஜன் இது தொடர்பாக நிச்சயம்நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications