நாடாளுமன்றத்தின் வெளியிலும் தி.மு.க.- அ.தி.மு.க. மோதல்
டெல்லி:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. நடத்திய கண்டன பேரணியில் தி.மு.க.தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.பிக்களும்,அ.தி.மு.க.எம்.பிக்களும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் ஒருவரைஒருவர் கடுமையாக சாடிக் கொண்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்புநிலவியது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க எம்.பிக்கள் தனித்தனியாகபத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
தி.மு.க. எம்.பி. வெற்றிச் செல்வனும், விடுதலை விரும்பியும் பத்திரிக்கையாளர்களைசந்தித்தரோது அ.தி.மு.க. மீது சராமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
வெற்றிச் செல்வன் பேரணியில் வந்து கொண்டிருந்த தன்னை போலீசார் லத்தியால்சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர் என்றும் தான் எம்.பி. என்று கூறிய பின்னும் அதைகாதில் வாங்காமல் போலீசார் தாக்கியதில் தனக்கு காலில் தொடைப் பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
சட்டையை கழற்றியவாறு அவர் நிருபர்களிடம் பேசினார். லோக்சபாவுக்கு உள்ளேயும்அவர் சட்டையைக் கழற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நாடாளுமன்றத்தின் வெளியே திமுகவினர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோதேஇவர்களுக்கு சற்று தூரத்தில் அ.தி.மு.க. எம்.பிக்கள் பி.எச் பாண்டியன், மலைச்சாமிதலைமையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். தி.மு.கவினர் வன்முறையில்ஈடுபட்டதால்தான் போலீசார் தாக்குதல் நடத்தினர் என்று அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாகவே உள்ளது. சட்டம், ஒழுங்கு எந்த விதத்திலும்பாதிக்கப்படவில்லை என்று முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், தற்போதையஅ.தி.மு.க. எம்.பியுமான பி.எச்.பாண்டியன் கூறினார்.
இரு அணியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடிக் கொண்டிருப்பதால்நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications