ஜெ.வுக்கு எதிரான சென்னை தொழிலதிபர் மனைவியின் மனு தள்ளுபடி
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா தன் கணவனுக்கு எதிராக பொய்வழக்குகள் போடுவதாக குற்றம் சாட்டி சென்னைதொழிலதிபரின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சலாவுதீன் மட்டும் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் சலாவுதீனின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். சொந்த காரணங்களுக்காக ஜெயலலிதா தன் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைகூறியுள்ளதாகவும் தன் கணவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும், "என் கணவர் 1991-96ல் ஜெ ஜெ டிவிக்கு தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி வந்தார். ஜெயலலிதா1997ம் ஆண்டு என் கணவரை அழைத்து சுதாகரன் தன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பணத்தை எங்குவைத்திருக்கிறார் என்ற விவரத்தை கூறுமாறு கேட்டார்.
ஆனால் என் கணவர் அது குறித்து எதுவும் தெரியாது என்று கூறியும், என் கணவரை ஜெயலலிதா மிரட்டினார்.தற்போது என் கணவர் மீது போதைப் பொருட்கள் வைத்துள்ளதாக பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் துணை செயலாளர் என் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதும், என்கணவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர்கள் பேசியதுடேப்பில் பதிவாகி உள்ளது" என்று தன் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.பி.பட்நாயக் மற்றும் நீதிபதி ருமா பால் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சலாவுதீனின் வழக்குகள் சென்னையில் நடந்து கொண்டிருக்கும்போது சலாவுதீனின் மனைவி உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சலாவுதீனின் மனைவியின் வக்கீல் இதற்கு பதிலளிக்கையில், என் கட்சிக்காரர் சென்னையில் தன் உயிருக்கு ஆபத்துஏற்படக்கூடும் என்ற பயம் இருந்த காரணத்தால் தான் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் என்றார்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக ஜெயலலிதா சலாவுதீன் மீது பொய் வழக்குபோட்டுள்ளதாகவும், சலாவுதீன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றுதாக்கல் செய்துள்ள மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று கூறினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications