சென்னை வந்தார் ரங்கராஜன்
சென்னை:
திமுக பேரணியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் வன்முறையிலும் 5 திமுக தொண்டர்கள் கொல்லப்பட்டதையடுத்துதமிழக ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் ஆந்திர மாநில ஆளுனர் ரங்கராஜன் இன்று (திங்கள்கிழமை) சென்னை விரைந்துவந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவும் ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
போலீஸ் விரல் துண்டிப்பு:
வன்முறையில் இறங்கிய திமுக தொண்டர்கள் ஒரு போலீஸ்காரரின் விரலைத் துண்டித்துவிட்டனர். ரத்தக் காயத்துடன் அவர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
போலீஸ்-திமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது, கடற்கரை சாலையில் உள்ள குப்பங்களைச் சேர்ந்த ரவுடிக்கும்பல்களும் இந்த சண்டையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
அவர்கள் கையில் கிடைத்ததை எடுத்து கண்ணில் படுபவர்களை எல்லாம் தாக்கினர். போலீஸ், திமுக தொண்டர்கள் கையில்இருந்த வாட்ச், மோதிரங்கள், பணத்தைப் பறிக்கும் செயலில் இந்தக் கும்பல்கள் ஈடுபட்டன.
பேரணியில் கடைசியில் வந்த தொண்டர் கூட்டம் தான் வன்முறையைத் தூண்டிவிட்டதாக அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்களும், போலீசாரும் தெரிவித்தனர்.
முத்துக்கருப்பன் பேட்டி:
சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில்,போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் தான் இறந்தார். கலவரக் கும்பல் தாக்கியதில் 32 போலீசார் காயமடைந்துள்ளனர் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications