நாடாளுமன்றத்தில் சட்டையை கழற்றிய திமுக எம்.பி
டெல்லி:
நாடாளுமன்றத்தில் சட்டையைக் கழற்றிக் காட்டி திமுக எம்.பி. வெற்றிச் செல்வன் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்று டெல்லியில் லோக் சபா கூடியதும் திமுக எம்.பிக்கள் எழுந்து நேற்று சென்னையில் போலீசார் அராஜகம்குறித்து பிரச்சனையைக் கிளப்பினர். இந்த விவகாரம் முழுக்க முழுக்க மாநில சட்டம்-ஒழுங்கு பிரச்சனைதொடர்பானது என்பதால் இது தொடர்பாக விவாதிக்க முடியாது அதிமுக எம்.பிக்கள் கூறினர்.
இதையடுத்து திமுக எம்.பிக்களும் அதிமுக எம்.பிக்களும் ஒருவர் மீது ஒருவர் கடும் சொற்களால் திட்டிக்கொண்டனர்.
இந் நிலையில் தொகுதி திமுக எம்.பியான வெற்றிச் செல்வன் திடீரென சட்டையைக் கழற்றினார். வேஷ்டியையும்தொடை வரை உயர்த்தினார். போலீஸ் தடியடியில் தனது உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்களைக் காட்டினார்.
நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் சட்டையைக் கழற்றியதால் பிற உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.வேஷ்டியை தொடை வரை அவர் உயர்த்தியதையடுத்து சபாநாயகர் பாலயோகி உள்ள அவையில் அனைவரும்விக்கித்துப் போயினர்.
உடனடியாக சட்டையை அணியுமாறு வெற்றிச்செல்வனிடம் சபாநாயர் திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதைகாதில் வாங்கவில்லை. சட்டையைக் கழற்றி அவையின் மாண்பையும் மரபையும் மீறுகிறீர்கள், தயவுசெய்துஉடையை அணியுங்கள் என சபாநாயகர் பலமுறை வலியுறுத்தியும் வெற்றிச் செல்வன் கேட்கவேயில்லை.
அரை நிர்வாணமாய் அவையில் இருந்த ஒவ்வொரு எம்.பியிடமும் போய் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் காட்டிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. யெர்ரன் நாயுடு எழுந்து, வெற்றிச் செல்வனை சட்டையைவலுக்காட்டாயமாக அணியச் செய்தார். ஆனாலும் தொடர்ந்து திமுகவினர் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷம்போட்டவண்ணம் இருந்ததால் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
ராஜ்யசபா:
ராஜ்யசபாவிலும் திமுகவினர் பிரச்சனையைக் கிளப்பியதால் அந்த அவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
காலையில் அவை கூடியதும் திமுக எம்.பி. விடுதலை விரும்பி எழுந்து, ஜெயலலிதா அரசு அராஜகம் குறித்துவிவாதக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், மாநில சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை இங்கு பேச முடியாது எனராஜ்யசபை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த் அனுமதி தர மறுத்தார்.
ஆனால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மீறப்பட்டுவிட்டது என விடுதலை விரும்பி தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பாராளுமன்ற அமைச்சர் ஓ.ராஜகோபால் சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால், இதை விடுதலை விரும்பியும் பிற திமுக எம்.எல்.ஏக்களும் ஏற்கவில்லை. தொடர்ந்து அவர்கள் கோஷம்எழுப்பினர். இதையடுத்து ராஜ்யசபாவை ஒத்தி வைப்பதாக கிருஷ்ணகாந்த் அறிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications