திட்டமிட்டு தாக்கினர்: கருணாநிதி புகார்
சென்னை:
தி.மு.க.கண்டன பேரணியில் கலந்து கொண்ட தி.மு.க.தொண்ர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதையும், துப்பாக்கிசூடு நடத்தியதையும் தி.மு.க.தலைவர் கருணாநிதி வன்மையாக கண்டித்துள்ளார்.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தி.மு.க.தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.போலீசார்தி.மு.க.தொண்டர்கள் மீது நடத்திய தடியடி நடத்தியதையும், துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் தி.மு.க. தலைவர்கருணாநிதி வன்மையாக கண்டித்துள்ளார்.
சென்னை கடற்கரையில் சீரணி அரங்கில் நடந்த பொதுக்கூட்டதில் அவர் பேசுகையில் கூறியாதவது:
நான் பேரணியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தொலைக்காட்சி மூலம் பேரணியை பார்த்தேன்.லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பேரணியை அமைதியாக நடத்த வேண்டும் என்று நான் தொண்டர்களை கேட்டுக் கொண்டேன். ஆனாலும்மறைமலை அடிகளார் பாலத்தில் இருந்து காமராஜர் சாலை வரை பேரணியில் காட்டிய அமைதி, கட்டுப்பாட்டுக்குமதிப்பளிக்க முடியாத போலீசார், ஆத்திரத்தில் திமுக தொண்டர்களை அடித்து காயப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் இந்த மேடைக்கு ரத்தம் சொட்டச் சொட்ட வந்ததை பார்த்திருப்பீர்கள். எத்தனைபேர் தாக்கப்பட்டார்கள்,என்னென்ன ஆகியுள்ளது என்பது நாளை (திங்கள்கிழமை) தான் தெரியும்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தடியடிப் பிரயோகம், கண்ணீர் புகைக் குண்டு வீச்சு என்றுதிட்டமிட்டபடி செயல்படுத்தி உள்ளனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட கட்சியினருக்கு எனது நெஞ்சத்தில் இருந்து ஆழ்ந்தஆறுதலையும், நன்றியையம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா அரசின் இந்த செய்கைகள் விபரீதமாகி விடக்கூடும் என்பதால் இந்தக் கூட்டத்தை நீண்ட நேரம்நடத்த முடியாது என்று அன்பழகன் கூறியது போல், இங்குள்ள நிலைகளை உணர்ந்து உங்களை வீடுகளுக்கும்,ஊர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
தடியடிப் பிரயோகத்தை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் நடத்தவில்லை. நம் நாட்டைச் சேர்ந்த ராமசாமியும்,கந்தசாமியும் தானே அவர்கள். காக்கிச்சட்டை போட்டதும் அவர்கள் கடினசாமிகளாகிவிட்டனர்.
உங்களை அடித்தவர்கள் உங்கள் சகோதரர்கள்தான். எய்தவன் இருக்க அம்பை நோவதேன். அம்பை நொந்துகொள்வது முட்டாள்தனம். எய்தவர்கள் யார் என்பதை எண்ணிப்பார்த்து தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க தயாராகஇருக்க வேண்டும்.
நான் நெருப்புத்துண்டங்களை வீச இருக்கிறேன் என்று எனக்கு முன் பேசிய நடிகர் சரத்குமார் கூறினார்.நெருப்புத்துண்டங்களை இப்போது வீச மாட்டேன். எப்போது வீச வேண்டுமோ அப்போது வீசுவேன்.
பேரணி முழுவதும் அமைதி காத்த நீங்கள் அனைவரும் இனியும் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்றுகூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications