பாமக வந்தால் நாங்கள் போவோம்: திருமாவளவன்
சென்னை:
தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ப்பது தொடர்பாக கருணாநிதி சமரசமுயற்சி மேற்கொண்டால், எங்கள் அமைப்பு அதை ஏற்காது. பா.ம.க. இருக்கும் கூட்டணியில் எங்கள் அமைப்புஇருக்காது என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ராமதாஸ் தன்னை சந்தித்து பேசிய பின்னரே பா.ம.கவை, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு உள்ளது.விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கும், பா.ம.கவிற்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
பா.ம.கவை, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முன் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
ஆனால், கருணாநிதியின் சமரச பேச்சை விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஏற்காது என்று திருமாவளவன் தற்போதுகூறியுள்ளார். இது குறித்து சென்னையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும்போது:
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைப்பற்றி ராமதாஸ் மிகவும் மோசமாக விமரிசனம் செய்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கொள்கை, நெறியற்ற வன்முறை கும்பல் என்று கூறியுள்ளார்.
எங்களை இவ்வாறு மோசமான முறையில் விமரிசனம் செய்த பா.ம.கவுடன் நாங்கள் இணைந்துசெயற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி எந்த விதமான சமரச முயற்சியில்ஈடுபட்டாலும்,ரமதாசுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டேன்.
ராமகதாசுடன் இதற்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அது மிகக் கேவலமான செயலாக இருக்கும்.விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் அமைப்புகளுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க. தலைவர்கருணாநிதியையும் பா.ம.க.தலைவர் ராமதாஸ் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார்.
பா.ம.க. சேர்ந்துள்ள கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இருக்காது. தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால் நாங்கள் அந்த அணியில் இருந்து வெளியேறுவோம்.
தி.மு.க. அணியில் பா.ம.க. சேர்ந்தால் அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எங்கள் அமைப்பின் மத்திய கமிட்டியும், தலித் மக்களும் கூறிவருகின்றனர்.
தேவை ஏற்பட்டால் நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் மங்களூர் தொகுதியில்போட்டியிட தயங்க மாட்டேன் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications