டான்சி வழக்கு: ஜெ. அப்பீல் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை:
டான்சி நில வழக்கில் தனி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனு மீதான விசாரணையை இந்த மாதம் 27ம் தேதிக்குஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதனால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது.
தனக்கு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல்செய்தார் ஜெயலிலதா. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மீண்டும் தமிழக முதல்வராக பதவிஏற்றுள்ளார் ஜெயலலிதா.
இந்த வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு, அரசுசிறப்பு வக்கீலாக வெங்கடபதி என்பவரை நீதிமன்றம் நியமித்தது.
இந்த வழக்கு திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.ஆனால், வக்கீல்கள் போராட்டம் காரணமாக வழக்கு அன்றும் விசாரணை நடைபெறவில்லை. இன்று(செவ்வாய்க்கிழமை) வழக்கு விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமையும் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்குவந்த போது அரசு வக்கீல் தனக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை நீதிபதி ஏற்க மறுத்தார். 4 வார கால அவகாசம் தர முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை இந்த மாதம்27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications