வாஜ்பாய் சாதனை
டெல்லி:
நாளை டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொடியேற்றுவதன் மூலம்தொடர்ந்து 4வது முறையாக தேசியக் கொடியேற்றும் காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல்பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற இருக்கிறார்.
இதனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தபிரதமர்கள் தான் தொடர்ந்து செங்கோட்டையில் கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றிவந்தனர்.
காங்கிரஸ் அல்லாத அரசுகள் ஏதும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததில்லை. உள்கட்சிப்பூசல் காரணமாக அவை கவிழ்ந்தன. ஜனதா கட்சியைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய்இரண்டரை ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த போது 3 முறை சுதந்திர தினத்விழாவில் கொடியேற்றியுள்ளார்.
1989ம் ஆண்டில் ஜனதா தளத்தின் சார்பில் பிரதமராக இருந்த வி.பி. சிங் ஒரு முறைதான் கொடியேற்ற முடிந்தது. அவரை சந்திரசேகர் கவிழ்த்தார். சந்திர சேகர் கூட ஒருமுறை தான் கொடியேற்றினார். அவரையும் கவிழ்த்தது காங்கிரஸ்.
பின்னர் மீண்டும் ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தது தேவெ கெளட ஒரு முறையும்குஜ்ரால் ஒருமுறையும் தேசியக் கொடி ஏற்றினர். இவர்கள் எல்லாம் இரண்டாவதுசுதந்திர தினம் வரும்வரை ஆட்சியில் நீடிக்கவில்லை.
இந் நிலையில் வாஜ்பாய் இப்போது 4வது முறையாக கொடியேற்றப்போகிறார். இதன்மூலம் தொடர்ந்து தேசியக் கொடியேற்றும் காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர்என்ற பெருமையை அவர் அடைகிறார்.
தொடர்ந்து ஆட்சியில் இருந்து வாஜ்பாய் கொடி ஏற்றுவது குறித்து தாங்கள் மிகவும்மகிழ்ச்சியடைவதாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த பா.ஜ.கவின் எம்.பிக்கள் கூட்டத்தில், மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி, சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும்மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.
இந்த கூட்டம் 45 நிமிட நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் கலந்துகொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications
