இன்று அறிக்கை அனுப்புகிறார் ஆளுநர்
சென்னை:
திமுக பேரணியின்போது நடந்த வன்முறை குறித்து மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் ரங்கராஜன் இன்று(செவ்வாய்க்கிழமை) விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பவுள்ளார்.
அந்தப் பேரணியின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்உயிரிழந்தனர்.
வன்முறைக்குப் போலீஸாரும், அதிமுகவினரும்தான் காரணம் என்று திமுக தரப்பில் ஆளுநர் ரங்கராஜனிடம் புகார்கொடுக்கப்பட்டது. இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி,ஆளுநரை நேரில் சந்தித்தபோது கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் தரப்பில் தலைமைச் செயலாளர் பி.சங்கர் ஆளுநரை நேரில் சந்தித்து வீடியோபடங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் தமிழக அரசின் விளக்கத்தை நேரில் சந்தித்துக்கொடுத்தார்.
இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் ரங்கராஜன் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. தலைமைச் செயலாளர் சங்கர், மாநகர ஆணையர் முத்துக்கருப்பன் ஆகியோர்கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆளுநர் அறிக்கை அனுப்பவார் என்றும்கூறப்படுகிறது. அனேகமாக செவ்வாய்க்கிழமையே இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்என்றும் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications