மத்திய விசாரணை கமிஷன் தான் வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை:
தமிழக போலீஸ் அராஜகம் குறித்து விசாரிக்க மத்திய அரசின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக சார்பில் கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பேரணிநடத்தப்பட்டது. இந்தப் பேரணியின் முடிவில் போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே பெரியகலவரம் வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல திமுக தொண்டர்களும், போலீசாரும்காயமடைந்தனர்.
இது குறித்து விசாரணை செய்ய நீதிபதி பக்தவச்சலம் தலைமையிலான குழு அமைக்கப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாநில அரசு அமைக்கும் விசாரணைக் கமிஷன் மூலம் தமக்கு நியாயம்கிடைக்காது என்றும் அதனால் மத்திய அரசு இதற்காக விசாரணைக் கமிஷன் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுகருணாநிதி கோரினார்.
இதுகுறித்து ஜெயலலிதா கூறுகையில், 2 விசாரணைக் கமிஷன் தேவையற்றது. மாநில அரசு அமைத்துள்ளவிசாரணைக் கமிஷனே போதுமானது என்றார்.
ஆனால் கருணாநிதி அதை ஏற்க மறுத்து, ஜெயலலிதா அரசு பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை தமிழகத்தில்போலீசார் நடத்தி வரும் அராஜகப் போக்கு பற்றி விசாரிக்க மத்திய அரசு தனியாக ஒரு விசாரணைக் கமிஷனைஅமைக்க வேண்டும் என்றார்.
இது பற்றி நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 3 மாத காலமாக மனித உரிமைகள் மீறப்படுவதும், தனி மனித அடிப்படை உரிமைகள்மறுக்கப்பட்டு வருவதும் வழக்கமாகியுள்ளன.
என்னை நள்ளிரவில் கைது செய்த ஜெயலலிதா அரசு நீதிபதி ராமன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனைஅமைத்துள்ளது. அதுபோல நேற்று முன்தினம் நடந்த வன்முறை பற்றி விசாரிக்க நீதிபதி பக்தவச்சலம் தலைமையில்மற்றொரு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது.
இந்த 2 விசாரணைக் கமிஷன்களுக்குப் பதிலாக ஜெயலலிதா ஆட்சியில் திமுகவினர் மீது போலீசார் நடத்திவரும்அராஜகப் போக்கு குறித்து விசாரிக்க மத்திய அரசு சார்பில் ஒரே விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.
திமுக பேரணியின் போது கலகம் ஏற்படுத்துவதற்காக அதிமுகவில் உள்ள ரெளடிகளை போலீசார் அழைத்துவத்திருந்தனர். அதற்கான புகைப்பட ஆதாரம் என்னிடம் உள்ளது. (பேரணியில் மதுரை காவல்துறைகண்காணிப்பாளர் ஒரு ரவுடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்).
திமுகவினரிடமிருந்த பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தையும் போலீசார் முன்பே பிடிங்கி வைத்துக் கொண்டனர்.பிறகு எப்படி திமுகவினர் தாக்கமுடியும் என்று அவர் நிருபர்களிடம் கேட்டார்.
மேலும், கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த தொண்டர்கள் சிலரை சிலவன்முறையாளர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். ஆனால் சில காரணங்களால் இந்த உண்மையைக் கூற டாக்டர்கள்மறுக்கிறார்கள் என்றார்.
பிறகு, வரும் 16 -ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக கலந்து கொள்ளுமா என்றுகேட்டதற்கு, அது பற்றி கட்சி நாளை முடிவு செய்யும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications