மீண்டும் ஆளுநரை சந்திக்க ஜெ. திட்டம்
சென்னை:
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தமிழக ஆளுநர் டாக்டர் ரங்கராஜனைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா,மீண்டும் மாலையில் அவரைச் சந்திக்கவுள்ளார்.
இதுகுறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்காக, தற்காலிக தமிழக ஆளுநர் நேற்று சென்னை வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியும், தமிழக அரசு தலைமைச் செயலாளர் சங்கரும் நேற்றே ஆளுநரைச் சந்தித்துள்ளநிலையில், இன்று காலை ஜெயலலிதாவும் ரங்கராஜனைச் சந்தித்து திமுக பேரணியின் போது நடந்த சம்பவங்கள்பற்றிக் கூறியுள்ளார்.
சுமார் 45 நிமிடங்களுக்கு நீடித்த இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது:
வன்முறை குறித்து தலைமைச் செயலாளர் சங்கர் திங்கள்கிழமை காலை ஆளுநரிடம் அறிக்கை ஒன்றைஅளித்தார். பின்னர் மாலையில் மேலும் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. இவற்றின் நகல்கள் மத்தியஉள்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளை அடிப்படையாக வைத்தே மத்திய அரசுக்கு ஆளுநர்அறிக்கை அளிப்பார்.
வன்முறை குறித்து விசாரிக்க ஏற்கனவே விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசும்இதுகுறித்து ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும் என்று திமுக கூறுவது தேவையற்றது. ஒரேபிரச்சினையை விசாரிக்க 2 விசாரணைக் கமிஷன்கள் தேவையில்லை.
நடந்த வன்முறையில் அதிமுகவுக்குத் தொடர்பில்லை. ஊர்வலத்தினர் அயோத்தியா குப்பம் பகுதிக்குள் புகுந்துதாக்குதலில் ஈடுபட்டதால் அந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பித் தாக்கியுள்ளனர். எனவே தான் பெரும்கலவரம் மூண்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை என்றார் ஜெயலலிதா.
இந்நிலையில், இன்று மாலைக்குள் மீண்டும் ராஜ் பவன் சென்று ஆளுநரைச் சந்திக்கவுள்ளார் ஜெயலலிதா.
ஆளுநர் ரங்கராஜன் இன்று காலையே மீண்டும் ஹைதராபாத் திரும்புவதாக இருந்தது. ஆனால், தற்போதுள்ளஅரசியல் சூழ்நிலை காரணமாக அவர் ஹைதராபாத் செல்லும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
ஜெ.-ஆளுநரின் இந்த 2வது சந்திப்பு முடிந்த பிறகே, தன்னுடைய விரிவான அறிக்கையை மத்திய அரசுக்குஆளுநர் ரங்கராஜன் அனுப்பி வைப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications