மலேசியாவில் 7 தமிழர்கள் படுகொலை: 2 பேர் கைது
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, 2வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு முன்னர், பெருமாளின் வீட்டிலிருந்து எந்தவிதமான பேச்சுக் குரலும் கேட்காமல், வீடும் நீண்டநேரமாகப் பூட்டிக் கிடந்தது. சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டினர் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து, பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெருமாள் உள்பட வீட்டிலிருந்தஅனைவருமே கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், முகம்மது மசூத் ராணா (27) மற்றும் ரஸூல்கரீம் (32) என்ற வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறிய இந்த 2 பேரும், அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவந்தது தெரிய வந்தது. இந்த 2 பேரிடமும் வரும் 23ம் தேதி கொலை சம்பந்தமான விசாரணை துவங்குகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த 2 பேருக்கும் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications