அமில பாட்டில் வெடித்து கடலூர் விஞ்ஞானி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அமில பாட்டில் வெடித்ததில் காயமடைந்த விஞ்ஞானி ஒருவர்உயிரிழந்தார்.
அந்தமானிலிருந்து அவர்கள் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் 3 பேரும் மற்றொரு ஒரு ஆய்வில்ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோதனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு அமில பாட்டில் திடீரென்று வெடித்துச்சிதறியது.
இதில், 3 விஞ்ஞானிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்குக் கப்பலிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
ஆனால், சிறிது நேரத்திலேயே மணிவண்ணன் இறந்தார். சென்னை வந்து சேர்ந்த கப்பலில் அவருடைய உடல்மட்டும்தான் வந்து சேர்ந்தது.
கடற்கரை போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாகத் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விஞ்ஞானிமணிவண்ணின் உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காயமடைந்த மற்ற 2 விஞ்ஞானிகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications