தமிழகத்தில் "தம்" அடிக்கத் தடை வருகிறது
சென்னை:
"புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று" என்பது பழமொழியா புதுமொழியா என்று தெரியாது. ஆனால், எல்லாதம் பிரியர்களும் சொல்லும் ஒரு சமாதான வார்த்தை அல்லது நொண்டிச் சாக்கு.
சிலர் "தம்மடிக்கலன்னா மதிக்க மாட்டானுங்க மாப்பளே" என்பார்கள். அதாவது அவர்களுக்கு உணவு, உடைஎவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு "புகை" முக்கியம்.
இதனால் தொண்டை கெடும், கேன்சர் வரும் என்று பயமுறுத்தினாலும் அதற்கெல்லாம் நாம் பயப்படுவதில்லை.
புகை பிடிப்பதால் உங்கள் உடல் நலம் கெடுவது மட்டுமல்ல, பிறரின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது என்றபிரச்சாரம் உலகம் முழுவதும் பலம் பெற்று வருகிறது. இதையடுத்து பொது இடங்களில் புகைபிடிக்க பல நாடுகள்தடைவிதித்து வருகின்றன.
இந்தியாவில் ரயில்வேதுறை தான் முதலில் இந்தத் தடையை அமலாக்கியது. இதன்மூலம் ரயில் நிலையங்களில்சிகரெட், பீடி விற்க தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் வெற்றிகரமாக இத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர், கேரள மாநிலம் தான் இந்தத் தடையை அமலாக்கியது. இதையடுத்து பெங்களூரிலும் பொது இடங்களில்புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், முறையாக இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந் நிலையில் பொது இடங்களில் தம்மடிக்க தடை கொண்டு வரப்போவதாக தமிழக அரசும் அறிவித்துள்ளது.
சுதந்திர தின சிறப்புரையில் தனது இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அதாகப்பட்டது, இனிமேல் பஸ் ஸ்டாண்டு, சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் அடிக்க முடியாது.இதைக் கேட்டவுடனே பல "தம்" பிரியர்களுக்கு தொ(ண்)டை நடுங்க ஆரம்பித்திருக்கும்.
"தம்மடிப்பதே பலர் பார்த்து வியக்கவேண்டும் என்பதற்காகத்தான். நாட்டில யார் யாரோ சங்கம் வச்சிக்கிட்டுஎதுஎதுக்கோ போராடுரான். இனிமேல் தம்மடிப்பவர்கள் சங்கம் என்று ஒரு சங்கம் ஏற்படுத்தி போரட வேண்டியதுதான்" என்கிறார் நண்பர் ஒருவர்.
வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் இந்தத் தடையை உண்மையிலேயே செயல்படுத்தினால், தமிழக அரசைப்பாராட்டலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications