சட்டசபை மரபு மீறப்பட்டது - அன்பழகன் புகார்
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக உறுப்பினர் மற்றும் 2 முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டசபையில்இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் மரபு மீறல் நடந்துள்ளதாக சட்டசபை திமுக எதிர்க்கட்சித்தலைவர் க.அன்பழகன் கூறியுள்ளார்.
ஆசபாநாயகர் காளிமுத்து இரங்கல் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பின்னர் தீர்மானத்தை அவரே வாசித்துதீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதுகுறித்து அன்பழகன் புகார் கூறியுள்ளார். சட்டசபைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வழக்கமாக ஒரு உறுப்பினர் இறந்து விட்டால் அதுதொடர்பாக சபையில் அவை முன்னவர் இரங்கல்தீர்மானத்தைக் கொண்டு வருவார். பின்னர் அந்தத் தீர்மானம் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்பேசுவார்கள், பின்னர் முதல்வர் பேசுவார்.
அதன் பிறகு தீர்மானத்தின் மீது இறுதியாக சபாநாயகர் பேசி அது நிறைவேற்றப்படும். இதுதான் நடைமுறை.
ஆனால் தற்போது இந்த மரபு மீறப்பட்டுள்ளது. சபாநாயகர் அனைவரையும் எழுந்து நிற்கச் சொன்னார். பிறகுஉறுப்பினர் பெருமாள் இறந்தததற்கு 2 நமடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கூறினார்.
பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது. திரு பெருமாள் எந்தக்கட்சியைச் சார்ந்துள்ளாரோ அந்தக்கட்சியின்உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கூட இது பற்றிப் பேச அனுமதிக்கப்படவில்லை.
எதிர்கட்சி உறுப்பினர் பெருமாள் மறைந்துள்ள நிலையில் எங்களுடைய உணர்வுகளைப் பேசி சட்டசபையில்பதிவுசெய்ய அனுமதிக்கப்படவில்லை. இது எதிர்கட்சி உறுப்பினர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது. இதைநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார் அன்பழகன்.
அதிமுக அரசு சட்டசபை விதிகளை இவ்வாறு தொடர்ந்து மீறிவந்தால், நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்களைக்கலந்து ஆலோசித்து இது பற்றி ஒரு முடிவு எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
கருணாநிதி கருத்து:
இதுபற்றித் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியதாவது:
சட்டசபையில் உறுப்பினர் பெருமாளின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அனைத்துக்கட்சிஉறுப்பினர்களையும் அதுகுறித்து பேச அனுமதிக்காதது மரபுமீறிய செயல் ஆகும். இது கண்டிக்கத் தக்கது.
இதுவரை தமிழக சட்டசபை வரலாற்றில் எப்போதும் இவ்வாறு நடந்ததில்லை. மேலும், உறுப்பினர்இறந்ததற்காகபட்ஜெட் தாக்கல் செய்யாமல் சபையை ஒத்திவைத்தது தேவையற்றது. அஞ்சலி செலுத்திய பிறகு, பட்ஜெட்டைத்தாக்கல் செய்திருக்கலாம் என்று கருணாநிதி கூறினார்.
மேலும், தமிழகத்தில் பொதுஇடங்களில் புகைபிடிப்பதை தடைசெய்ய முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருப்பது பற்றி கருணாநிதியிடம் கேட்டதற்கு, அது பாராட்டுக்குரிய முடிவுதான் என்று கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications