ஏசுவாக சித்தரித்து கட்-அவுட் வைத்தது எனக்குத் தெரியாது - கருணாநிதி
சென்னை:
ஏசு சிலுவையைச் சுமப்பதையும் நான் கைது செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு திமுகவினர் வைத்த கட்- அவுட் பற்றிஎனக்கு முன்பே தெரியவில்லை. ஆனால், தெரியவந்தவுடன் அதை அகற்றச் சொல்லிவிட்டேன் என்று முன்னாள்முதல்வர் கருணாநிதி கூறினார்.
அதில் திமுகவின் பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்களும் தங்கள் தலைவரைப் புகழ்ந்தும், போலீசாரைத் தாக்கியும்பலவிதடான கட் - அவுட்களை வைத்திருந்தார்கள்.
அவற்றில் ஒன்றுதான் கருணாநிதியையும் இயேசுபிரானையும் ஒப்பிடுவது போல வரையப்பட்டிருந்தது.
அதில் ஒருபாதியில் இயேசு சிலுவையைச்சுமந்து வரும்போது அவருடன் யூதர்கள் வருவதுபோல இருந்தது.மற்றொரு பாதியில் கருணாநிதி கைது செய்யப்பட்டு, போலீசாரால் இழுத்துச் செல்வது போல இருந்தது.
இதைக்கண்டவுடன் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருணாநிதியிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு தெரியாமல், என் விருப்பத்திற்கு மாறாகஅந்த கட்-அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி அறிந்தவுடன் அதைநான் அகற்றச் சொல்லிவிட்டேன். ஒருஇடத்தில் தான் அப்படி நடந்திருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவைக் கன்னிமேரியாக சித்தரித்து பல போஸ்டர் வெளியிடப்பட்டதுஉங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் என்றார்.
மேலும், பேரணியில் செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நிருபர்கள் சுதந்திரநாளில் கூடஉண்ணாவிரதம் இருக்கும் நிலை உருவாகி உள்ளது.
நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் அதை பலமுறை வன்மையாக கண்டித்திருக்கிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications