மத்திய அரசுப் பணிக்கு ராஜகோபாலனை மட்டும் விடுவிக்கிறார் ஜெ.
சென்னை:
கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதிக் கொண்டிருக்கும் மத்திய அரசைத் திருப்திப் படுத்துவதற்காக, கறுப்புப் பூனைப்படைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை மட்டும் தமிழக அரசு அனுப்பி வைக்கும் என்றுகூறப்படுகிறது.
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி மாற்றம்செய்வதில் மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.
ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்புவது குறித்த முடிவை தமிழக அரசு வியாழக்கிழமைக்குள்அறிவிக்க வேண்டும் என்று மத்திய கெடு விதித்துள்ளது.
தற்போது போலீஸ் பயிற்சி கல்லூரியில் பணிபுரியும் ராஜகோபாலனை மட்டும், தேசிய பாதுகாப்பு படையான"கறுப்பு பூனைப் படை" பணிக்கு அனுப்ப ஜெயலலிதா ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
ராஜகோபாலன் கறுப்பு பூனைப் படையின் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கறுப்பு பூனைப் படைக்கு கடந்த 6மாத காலமாக முழு நேர டைரக்டர் யாரும் இல்லை. ராஜகோபாலனை அனுப்புவதற்கும் முதலில் ஜெயலலிதாமறுத்து வந்தார்.
இந்நிலையில், கருணாநிதி மற்றும 2 மத்திய அமைச்சர்கள் கைது சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 3ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தாவிடடால்,ராஜகோபாலனை தேசிய பாதுகாப்பு படையின் டைரக்டர் பணிக்கு அனுப்பி வைக்க ஜெயலலிதா தயாராகஇருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், ஜெயலலிதா தனது உறுதியான முடிவை வியாழக்கிழமை நிருபர்கள் கூட்டத்தில் அறிவிப்பார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications