காட்பாடியில் வெடிவிபத்து: 26 பேர் பலி
காட்பாடி:
காட்பாடியில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் அரசு ஆலையில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பெரும்வெடிவிபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 4 உடல்கள் தான் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உடலகளைமீட்கும் பணி நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ளது காட்பாடி. சென்னையில் இருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரில் அரசுக்குச்சொந்தமான தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் இன்று காலை 9.30க்கு அங்கு பயங்கரவெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
இந்த ஆலையில் வெடிகுண்டுகளுக்குத் தேவைப்படும் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர,வெடி குண்டுகளுக்குத் தேவைப்படும் நைட்ரேட்டுகள், ஜெலாட்டின் குச்சிகள், குண்டுகளை இயக்கச் செய்யும்டெடோனேட்டர்கள், டெடோனேட்டஸ் பீயூஸ்கள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சுரங்கம் தோண்ட, பாறைகளை உடைக்க உதவும் வெடி பொருள்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்பல தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவை எல்லாமே விரைவில் தீ பிடித்துக் கொள்ளும் ரகத்தைச் சேர்ந்தவை.
காலையில் நடந்த வெடி விபத்தையடுத்து ஆலையிலும் அதை ஒட்டியுள்ள கிடங்கிலும் தீ பரவியது. உள்ளே வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின.
இன்னும் தீ எரிந்து கொண்டுள்ளது. இதனால் உடல்களை மீட்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையின் யூனிட் 302 என்ற பிரிவில் தான் வெடி விபத்து நடந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications