சுதந்திரத்தை அவமானப்படுத்திய விழா
பவானி:
பவானியில் நடைபெற்ற ஒரு சுதந்திர தின விளையாட்டு விழா, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைஈந்த தியாகிகளையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் அவமதிக்கும் விதமாக அமைந்திருந்தது.
இந்த விழா கொண்டாட்டத்தின் போது பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வீரவிளையாட்டாக வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது.
இந்த வழுக்கு மரத்தின் மேலே தேசிய கொடி நட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு கீழே 4 மதுபானபாட்டில்களும், 3 குளிர்பான பாட்டில்களும், பொரி உருண்டை, கடலை உருண்டை, பணமுடிப்பு ஆகியவை கட்டிவைக்கப்பட்டு இருந்தன.
வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பங்கு கொள்ள பவானியின் சுற்றுப் பகுதிகளிலிருந்தும் 9 குழுக்கள் வந்திருந்தன.உயரமான தேக்குமரத்தில் உளுந்து, கிரீஸ், விளக்கெண்ணெய், மாட்டுக் கொழுப்பு ஆகியவற்றை கலந்து தேய்த்துவைத்தனர். வழுக்கு மரம் பள பளவென்று மின்னிக் கொண்டிருந்தது.
விளையாட்டில் பங்கு பெற்ற யாராலும் வழுக்கு மரத்தில் ஏற முடியவில்லை. மரம் ஏற முயன்ற அனைவரும் வழுக்கிவழுக்கி விழுந்து கொண்டிருந்தனர். காலையில் ஆரம்பித்த விளையாட்டு மாலை வரை தொடர்ந்தது. யாராலும்தேசிய கொடிக்கு கீழே கட்டப்பட்டிருந்த மதுபான பாட்டிலை தொட முடியவில்லை.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக நீதிக்கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் , துணைத்தலைவர் சூர்யா,செயலாளர் பழனி, பொருளாளர் தங்கபிரகாஷ். மற்றும் தில் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
தேசிய கொடிக்கு கீழே மதுபானபாட்டில்களுடன் நடந்த இந்த சுதந்திர தின வீர விளையாட்டு, கஷ்டப்பட்டு,போராடி பெற்ற சுதந்திரத்தையே அவமதிக்கும் விதமாக அமைந்திருந்தது.
சுதந்திரத்தை அவமானப்படுத்தும் விதமாக நடந்த போட்டியை அந்த பகுதியில் இருந்த போலீசார் கண்டுகொள்ளாதது அதிசயம்தான். அது வேதனை அளிக்கக் கூடியதும் கூட.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications