மத்திய அரசிடம் பணிந்தார் ஜெ.:ராஜகோபாலனை அனுப்ப சம்மதம்
சென்னை:
தமிழக அரசின் காவல்துறைப் பயிற்சிக்கல்லூரி இயக்குநராகப் பணியாற்றும் டி.ஜி.பி.ராஜகோபாலனை மத்தியஅரசுப்பணிக்கு அனுப்பிவைக்க முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.
கடந்த 1 மாதகாலமாக மத்திய அரசுப்பணிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்ட டி.ஜி.பி.ராஜகோபாலனைஅனுப்ப தொடர்ந்து மறுத்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்போது அவரை அனுப்ப சம்மதம்தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசியப்பாதுகாப்புப் படைக்கு இயக்குநராக இருந்த நிகில்குமார் பதவிக்காலம்முடிவடைந்ததையடுத்து இந்தப் பதவிக்கு ராஜகோபாலனை நியமித்தது மத்திய அரசு.
எனவே தமிழக அரசின் காவல்துறைப் பயிற்சிக்கல்லூரி இயக்குநராகப் பணியாற்றும் டி.ஜி.பி.ராஜகோபாலனைமத்திய அரசுப்பணிக்கு அனுப்பிவைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.
முதலில் அவரை அனுப்புவது குறித்து தமிழக அரசு எதுவும் தெரிவிக்காமல் இருந்தது. பிறகு சில நாட்கள் கழித்துமுத்துக்கருப்பன் உள்ளிட்டமேலும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அனுப்பவேண்டும் என்று மத்திய அரசுகேட்டது.
இந்த 4 அதிகாரிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
முதலில் இந்த 4 அதிகாரிகளையும் மத்திய அரசு அழைப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றுஜெயலலிதா சொல்லிவந்தார்.
இந்நிலையில் இந்த 4 அதிகாரிகளின் சேவை எங்களுக்குத் தேவை என்று கூறியும், மேலும் சில சட்டவிதிகளைஎடுத்துக்கூறியும் அவர்களை அனுப்ப முடியாது என்று பதிலளித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜகோபாலனை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடுவிதித்திருந்தது. அவ்வாறு மாநில அரசு செய்யவில்லை என்றால் மத்திய அரசு சட்டவிதிகளைப் பயன்படுத்திநேரடியாக அழைத்துக் கொள்ளூம் என்றும் மிரட்டியிருந்தது.
இதையடுத்து, ராஜகோபாலனை முதல்வர் ஜெயலலிதா மாநில அரசுப்பணியிலிருந்து விடுவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் ராஜகோபாலன் மாநில டி.ஜி.பி யாக இருந்தார். அடுத்து வந்த அதிமுக அரசு இவரைபோலீஸ்கல்லூரி இயக்குநராக நியமித்தது. இது ஒரு உப்புசப்பில்லாத பதவியாகும். முன்பு ஜெயலலிதா ஆட்சியில்டி.ஜி.பி.யாக இருந்த தேவாரத்திற்கும் இதே "ட்ரீட்மெண்டை"த் தான் கருணாநிதி வழங்கினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ராஜகோபாலனை விடுவித்தன் மூலம் மத்திய அரசுடனான மோதலின் சூட்டைசற்று தணித்துள்ளார் ஜெயலலிதா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications