காட்பாடி வெடிகுண்டு ஆலையில் வெடிவிபத்து: 30 பேர் பலி
காட்பாடி:
காட்பாடியில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் அரசு தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பெரும்வெடிவிபத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 7 உடல்கள் தான் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உடலகளைமீட்கும் பணி நடக்கிறது.
ஆலையில் டெடோனேட்டர்கள் தயாரிக்கும் பிரிவில் தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்திற்கானகாரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தநிறுவனத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலையில் வெடிகுண்டுகளுக்குத் தேவைப்படும் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர,வெடி குண்டுகளுக்குத் தேவைப்படும் நைட்ரேட்டுகள், ஜெலாட்டின் குச்சிகள், குண்டுகளை இயக்கச் செய்யும்டெடோனேட்டர்கள், டெடோனேட்டஸ் பீயூஸ்கள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சுரங்கம் தோண்ட, பாறைகளை உடைக்க உதவும் வெடி பொருள்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்பல தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவை எல்லாமே விரைவில் தீ பிடித்துக் கொள்ளும் ரகத்தைச் சேர்ந்தவை.
காலையில் நடந்த வெடி விபத்தையடுத்து ஆலையிலும் அதை ஒட்டியுள்ள கிடங்கிலும் தீ பரவியது. உள்ளே வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின.
வெடி விபத்து ஏற்பட்டபோது பலத்த சத்தம் கேட்டது. பல கி.மீ. தூரத்திற்கு இந்த வெடிச்சத்தம் கேட்டதாகவும்அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு, ரூ.50,000 நஷ்ட ஈடும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 நஷ்டஈடும், காயமடைந்த மற்றவர்களுக்கு ரூ.6,000 நஷ்ட ஈடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விபத்து நடந்துள்ள அந்தத் தொழிற்சாலையில், மேலும் வெடிகுண்டுகள் வெடித்துவிடாத படி, பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள வெடிகுண்டுகளை பாதுகாப்பான இடத்துக்குஅப்புறப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துநடந்த 302வது பிரிவின் மேற்பார்வையாளர், அப்போது வெளியே சென்றிருந்ததால், அவர் உயிர் தப்பி விட்டார்.
சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும், வருவாய்த்துறை அதிகாரிகளும்விரைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் விபத்து நடந்த இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளைமேற்பார்வையிட்டு வருகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications