மகனை போலீஸ் தாக்கியதாக கவுன்சிலர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சிக் கவுன்சிலரின் மகனை போலீஸார் தாக்கியதாக சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம்புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதி மாநகராட்சிக் கவுன்சிலராக இருப்பவர் ராணி கிருஷ்ணன். இவரது மகன் ரெஜியஸ்.

இவர் அடையாறு பகுதியில் போலீஸாரால் தாக்கப்பட்டதாக ராணி கிருஷ்ணன், வியாழக்கிழமை மாநகரகாவல்துறை கமிஷனர் முத்துக்கருப்பனிடம் அளித்துள்ள புகாரில்,

என் மகன் ரெஜியஸ், அமைந்தகரையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறார். தனது பாடம்சம்பந்தமாக புதன்கிழமை இரவு நண்பரின் வீட்டுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அடையாறு காவல் நிலையம் அருகில் அவர் வந்தபோது, எனது மகனின் மோட்டார் சைக்கிளை போலீஸார்வழிமறித்து விசாரித்துள்ளனர்.

பின்னர் பணம் கேட்டு என் மகனை மிரட்டியுள்ளனர். அதற்கு என் மகன் பணம் இல்லை என்று கூறவே, அவரைசரமாரியாக அடித்துள்ளனர். பின்னர், குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக வழக்குப்போடுவோம் என்றும்மிரட்டியுள்ளனர்.

அப்போது என் மகன், "என் தாயாரிடம் தகவல் சொன்னால் பணத்துடன் வருவார்" என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸார் "உன் தாயார் யார்?" என்று கேட்டுள்ளனர்.

என் பெயரைக் கூறியவுடன் ரெஜியஸை மேலும் போலீசார் அடித்துள்ளனர். பின்னர் என் வீடு உள்ள காரப்பாக்கம்பகுதியில் அவரை போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

எனது மகனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு முதலுதவிக்குப் பின்னர், தனியார்மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்.

கவுன்சிலர் மகன் என்று கூறியும் கூட என் மகனைக் கடுமையாகத் தாக்கிய போலீஸார் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தன் புகாரில் ராணி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+