நிருபர்களை தாக்க உத்தரவிடவில்லை: கூடுதல் டி.ஜி.பி.
சென்னை:
தி.மு.க. பேரணியின் போது பத்திரிக்கையாளர்களை தாக்குமாறு நான் உத்தரவிடவில்லை என்று புலான்ய்வுத் துறைகூடுதல் டி.ஜி.பி. வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.
போலீசார் தங்கள் மேல் நடத்திய தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்ககள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இத்தாக்குதலைக் கண்டித்து, சுதந்திர தினத்தன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரதம் கூடஇருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் கூடுதல் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி. வெங்கடகிருஷ்ணன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. பேரணியில் ஏற்பட்ட கலவரத்தின் போது காயமடைந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் ஆறுதலைதெரிவித்துக் கொள்கிறேன்.
கலவரம் நடந்தபோது, காயமடைந்து பயந்துபோய் நின்று கொண்டிருந்த பத்திரிக்கை நண்பர்களைஇன்ஸ்பெக்டர்கள் பூபாலன், சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கட்டுப்பாட்டு அறைக்கு பத்திரமாக அழைத்து வந்துகாயங்களுக்கு மருந்து போட்டு முதலுதவி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உளவுத்துறையைச் சேர்ந்த டி.ஜி.பியான ராஜேந்திரன்,கண்காணிப்பாளர் தாமரைக் கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோரிடம் காயம் பட்டவர்களைமருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அந்தஆம்புலனஸ் வரும் வழியிலேயே தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்குசொந்தமான மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பத்திரிக்கையாளர்கள் அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்களை தாக்கும்படி நான் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றுவெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications