மூப்பனார் உடல்நிலையில் முன்னேற்றம்
சென்னை:
மூப்பனாரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ராமச்சந்திராமருந்துவமனை டாக்டர் தணிகாசலம் தெரிவித்தார்.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்கூறினார்கள். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் மற்றும் அவரது உடலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்குறித்து ராமச்சந்திரா மருத்துவ மனைத் தலைவர் டாக்டர் தணிகாசலம் கூறியதாவது:
மூப்பனாருக்கு 24 மணிநேரத்திற்கு 2 முறை நிமோனியா காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. இதனால் அவருக்குகுழாய் மூலமும் ஊசி மூலமும் தான் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
மேலும் செயற்கை முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால் அவரது ரத்த ஓட்டம் மற்றும் நாடித்துடிப்புசீராக உள்ளது. எதிர்பார்த்ததை விட, தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்டாக்டர் தணிகாசலம்.
இதற்கிடையே, ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ஆகியோரும்மூப்பனாரின் உடல்நலம் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும்,நண்பர்களும் மூப்பனாரை மருத்துவ மனையில் சந்தித்து நலம் விசாரித்தார்கள். இந்நிலையில், மூப்பனாரின்உடல்நலத்தை நேரில் சென்று விசாரிப்பதற்காக, கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று(வெள்ளிக்கிழமை) போரூர் மருத்துவமனைக்குச் செல்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications