நிதி நிறுவன கடனை செலுத்த நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
ஆர்.பி.எப். நிதி நிறுவனத்தில் கடன் பெற்று திருப்ப செலுத்தாமல் உள்ள நடிகர் சரத்குமார் உள்ளிட்ட 80 பேருக்குநோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.பி.எப். நிதி நிறுவனத்திலிருந்து 80க்கும் அதிகமானவர்கள் ரூ.380 கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால்அவர்கள் கடனை அசல் மற்றும் வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது சிவில்மற்றும் கிரிமினல் வழக்கு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியன், ஆர்.பி.எப். நிதி நிறுவனத்திலிருந்துகடன் வாங்கியவர்கள் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கம்பெனி சட்ட வாரியம்நியமித்திருந்த இயக்குனர் ஏ.ஆர். ராவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் பேரில் முக்கிய கடன்தாரர்கள் பட்டியலை ராவ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்துசென்னை உயர் நீதீமன்ற நீதிபதி பாலசுப்ரமணியன், தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
ஆர்.எப்.எப். நிதி நிறுவனத்திலிருந்து அதிக அளவில் கடன் பெற்ற கடன்தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும். அவர்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ அதற்கு ஈடாக 90 சதவிகித பணத்தை அவர்கள்டெபாசிட் செய்ய வேண்டும்.
அல்லது 85 சதவிகிதம் மதிப்புள்ள தங்கநகைகளை செலுத்த வேண்டும். அல்லது 75 சதவிகிதம் அரசஉத்தரவாதமோ, வங்கி பங்குகளோ அல்லது 66.5 சதவிகிதம் அசையாப் பொருட்களையோ உடனடியாக தாக்கல்செய்ய வேண்டும்.
இதில் எந்த முறையின்படியும் பணத்தை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால் எவ்வளவு பாக்கித் தொகை உள்ளதோஅதை அவர்கள் 2 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கடன்தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.நோட்டீசுக்கு கடன்தாரர்கள் அளிக்கும் பதிலை, நீதிமன்றத்திற்கு இயக்குனர் ராவ் தெரிவிக்க வேண்டும்.
கடன்தாரர்கள் பணத்தை திருப்ப செலுத்துவது குறித்த நோட்டீசுக்கு எந்த பதிலும் தெரிவிக்வில்லை என்றால்,பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
ஆர்.எப்.எப். நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி திருப்ப செலுத்தாதவர்களில் தி.மு.க.ராஜ்ய சபா எம்.பியும் நடிகருமானசரத்குமார், முன்னாள் அமைச்சர் முத்துசாமி, நடிகர் பாண்டிய ராஜன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.
சரத்குமார் ரூ.3 கோடியும், முன்னாள் அமைச்சர் முத்துசாமி ரூ.12 கோடியும் கடன் வாங்கி, அதை திருப்பசெலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications